india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ரேசன் அட்டைதாரர்களுக்கு மளிகைப்பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும், கோயில் பணியாளர்களுக்கான உதவித் தொகை திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.

                             **************

18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

                             **************

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான முதலீட்டுமானியம் பெற சலுகை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

                             **************

தனிநபர் வாங்கும் ஆக்சிஜன் செறிவூட்டிக்கு வரி விதிப்பது சட்ட விரோதம் என, தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

                             **************

வெளிநாட்டு வீரர்கள் விலகினாலும் ஐ.பி.எல். போட்டியை முழுமையாக நடத்தி முடிப்பதே எங்களது முக்கிய குறிக்கோள் என இந்திய கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

;