india

img

இந்திய விளையாட்டு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம் ;
பணி: Coach

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.1,05,000 - 1,50,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் அல்லது என்எஸ்/என்ஐஎஸ் போன்ற ஏதாவதொரு புகழ்பெற்ற விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ இன் கோச்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofIndia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2021

;