india

img

எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்த பாஜக திட்டம்.... காங்கிரஸ் மூத்தத்தலைவர் மணீஷ் திவாரி தகவல்....

புதுதில்லி:
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன்பாக மக்களவை உறுப்பினர் களின் எண்ணிக்கையை ஆயிரத்திற் கும் அதிகமாக உயர்த்த ஒன்றிய பாஜகஅரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான மணீஷ் திவாரி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தில்லியில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்அமையும் மக்களவை 1000 எம்.பி.க்கள் அமரும் வசதியுடன் திட்டமிடப்பட்டு இருப்பதாக திவாரி தெரிவித்துள்ளார்.2024-ஆம் ஆண்டுக்கு முன்பே மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவதற்கான முன்மொழிவுஇருப்பதாகவும், இதனை பாஜகஎம்.பி.க்களில் இருக்கும் தனது நண் பர்களே தன்னிடம் கூறியதாகவும் டுவிட்டரில் மணீஷ் திவாரி குறிப்பிட் டுள்ளார்.

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்பாகபொது விவாதம் அவசியம் என்றும் திவாரி வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் எண் ணிக்கை அமைந்தால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பங்களிப்பு பெரிதும் குறைந்துவிடும் என்பதால் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் கருத்து பதிவிட்டுள்ளார்.

;