india

img

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக சமூகம் ஒன்றுபடட்டும்... ‘மகளிர் கேரளம்’ பிரச்சாரத்தில் சுதா சுந்தரராமன் அழைப்பு...

திருவனந்தபுரம்:
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்ட சமூகம் ஒன்றுபட வேண்டும்” என்று சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளத்தில், ஜூலை ஒன் றாம் தேதி தொடங்கி எட்டாம் தேதிவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மகளிர் கேரளம் பிரச்சாரத்தில் அவர் மேலும்பேசியதாவது:

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களுடையது மட்டுமல்ல. மாறாக, இது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. கோவிட் காலம் மக்களின் வாழ்க்கையில் பல்வேறுசிக்கல்களை உருவாக்கியுள் ளது. குடும்ப வன்முறை அதிகரித்தது. இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அட்டூழியங்களுக்கு எதிராக காவல் துறை உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுப்பது முக்கியம். சரியான நேரத்தில் நீதி உறுதி செய்யப்பட வேண்டும். அணுகுமுறையில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக்கூடாது. அதுதான் நீதி அமைப்புமீதான நம்பிக்கையை அதிகரிக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார்களை தெரிவிக்க முன்வர வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில், காவல்துறையினரையும், அதிகாரிகளையும் மக்கள் அச்சத்துடன் பார்க்கிறார்கள். புகார் செய்யக்கூட பெண்களால் முடியாது. ஆனால், கேரளாவில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதில் தொடங்கி, இதுபோன்ற வழக்குகளில் நீதியை நிர்வகிப்பது வரையிலான செயல்முறை முன் மாதிரியாகும். பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சுரண்டலின் வேர்கள் ஆண்களை மையப்படுத்தியும் மூலதன நடவடிக்கைகளுடனும் இணைக்கப்பட் டுள்ளன. ஆர்எஸ்எஸ்-ஸூம்பாஜகவும் பெண்கள் விரோத மனப்பான்மையையே வலுப் படுத்த முயற்சிக்கின்றன.இவ்வாறு சுதா சுந்தரராமன் பேசியுள்ளார்.

;