india

img

குஜராத்தில் குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத முதலை!

குஜராத்தின் வதோதரா நகரின் குடியிருப்புப் பகுதிக்குள் ராட்சத முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

குஜராத் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில், குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக வதோரா நகரின் குடியிருப்பு பகுதிக்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது. சுமார் 15 அடி நீளம் கொண்ட ராட்சத முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ராட்சத முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அதனை பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர்.