india

img

காலத்தை வென்றவர்கள் : கே.ஏ.அப்பாஸ் பிறந்த நாள்....

 கே. ஏ. அப்பாஸ் 1914ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆம் நாள் பிறந்தவர். திரைப்படக் கதை உரையாடல்களை எழுதுபவராகவும் திரைப்படத் தயாரிப்பாள ராகவும் எழுத்தாளராகவும் இதழியலாள ராகவும் விளங்கியவர் கே.ஏ. அப்பாஸ். உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்படைப்புகள் படைத்தவர். ‘நயா சனகர்’ என்னும் திரைப்பட நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அவர் எழுதி இயக்கிய திரைப்படங்கள்தேசிய விருதுகளையும் உலக விருதுகளையும் பெற்றன. சில இந்திப் படங்களையும் தயாரித்து வெளியிட்டார். இவருடைய சிறு கதைகளும் புதினங்களும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. 70 புத்தகங்களை எழுதியுள்ளார்.  தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை பிளிட்ஸ் எனும் ஆங்கில  இதழில் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மிரர்’ என்னும் இதழிலும் எழுதினார். உலகத் தலைவர்கள் ரூஸ்வெல்ட், குருசேவ் , மா சே துங் போன்றோரைச் சந்தித்து உரையாடி இதழ்களில் எழுதினார். சோவியத்து யூனியனின் ‘வோரோங்கி’ விருது (1984), காலிப் விருது (1983), உருது அகாதமி விருது (1984), பத்ம ஸ்ரீ விருது (1969) ஆகிய விருதுகளைப் பெற்றவர் கே.ஏ.அப்பாஸ். ‘இப்டா’ எனப்படும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்துஈடுபாட்டுடன் பணியாற்றினார். வங்கப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு ‘இப்டா’ தயாரித்த திரைப்படத்தை இயக்கினார் கே.ஏ.அப்பாஸ். 1946ல் நடைபெற்ற ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றார் கே.ஏ.அப்பாஸ்.

 பெரணமல்லூர் சேகரன்

;