ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்ற ஆன்லைன் செயலிகளில் மட்டுமே கடன் பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
விரைவாக கடன் பெறுவதற்காக அங்கீகரிக்கப்படாத இணையம் மற்றும் மொபைல் செயலிகளிலின் மூலம் கடன் வாங்குவோர்களில் சிலர் அதிக வட்டி தொந்தரவு, மறைக்கப்பட்ட பிற கட்டணங்கள் போன்ற தொந்தரவிற்கு பலியாகின்றனர். மேலும், பல அங்கீகரிக்கப்படாத செயலிகளில் பதிவேற்றப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இதுபோன்ற தவறுகளை தடுக்க, ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்று இயங்கும் செயலிகளில் மட்டுமே கடன் பெற வேண்டும் எனத் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.