india

img

3-ஆவது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்!பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

புதுதில்லி, செப். 4 - பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17-ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில், செவ்வாயன்று நடைபெற்ற ஆண் களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.  இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று மாரியப்பன் தங்கவேலு சாதனை படைத்துள்ளார். 2016-இல் தங்கமும், டோக்கியோ 2020-இல் வெள்ளியும், பாரீஸ் 2024-இல் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்

இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

“மாரியப்பன் தங்கவேலுவின் திறமை, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று பிரதமர் மோடியும், “தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினும் கூறியுள்ளனர்.