மும்பை, நவ. 04- 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா வில் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்ட மன்றத் தேர்தல் நடை பெறுகிறது.
இந்நிலையில், மகா ராஷ்டிராவின் டிஜிபி-யாக இருக்கும் ராஷ்மி சுக்லா பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக வும், அவரை உடனடியாக மாற்றக் கோரியும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத் உள்ளிட்ட மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணிக் கட்சி தலைவர்கள் கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து திங்களன்று மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி-யான ராஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.