india

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்க... பல லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் தயார்.... மத்திய பாஜக அரசுக்கு ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள  3 வேளாண் சட்டங்களைரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட தயாராக இருப்பதாக தில்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியின் எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூரில் லட்சத்திற்கும் மேற்பட்டபல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்தியப்பிரதேச மாநிலம், சிவப்பூரில் திங்கள்கிழமையன்று  பிரம்மாண்டமான விவசாயிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பேசுகையில்,  விவசாயிகள் தங்களது போராட்டத்தை மேலும் வலுப்படுத்தப் போகின்றனர்.  

தேவைப்பட்டால் லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சென்று நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட தயாராக உள்ளனர். கடந்த ஜனவரி 26 அன்று தில்லி நகருக்குள் புகுந்தவை வெறும் 3500 டிராக்டர்கள் தான். ஆனால் தேவைப்பட்டால், பலலட்சம் டிராக்டர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம். அமைச்சர்களாக இருப்பவர்கள் அதிகாரமற்றவர்களாக உள்ளனர் என்று கூறினார்.