சண்டிகர்
வேளாண் சட்டங்கள், நேரடிமானியம் போன்ற விவகாரங் கள் மூலம், மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டுப் பறிக்கிறது என்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள் ளார்.
பஞ்சாப்பில், வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியைத் துவக்கிவைத்து அம்ரீந்தர் சிங் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:‘தேசிய உணவு தானியக் கிடங்குக்கு பஞ்சாப் மாநிலம் மட்டும் 40 சதவிகிதம் அளவில் பங்களிக்கிறது. ஆனால் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்தியஅரசு பஞ்சாப் அரசை கலந்தாலோசிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி வேளாண் துறை மாநில அரசின் கட்டுப் பாட்டில் வரக்கூடியது. உண்மையில் மத்திய அரசுக்கு விவசாயிகளின் நலன்களில் அக்கறை இருக்கும் பட்சத்தில், அது மாநில அரசையோ, மாநில விவசாயிகளையோ கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண் துறையைசார்ந்திருக்கிறது. பஞ்சாப்பைப்பொறுத்தவரை விவசாயிகளுக் கும் இடைத்தரகர்களுக்கும் இடையே நூற்றாண்டுக்கும் மேலான உறவு இருக்கிறது. மத்திய அரசோ ‘சீர்திருத்தம்’ என்ற பெயரில், சிறப்பான இந்தஉறவை, அமைப்பை அழிக்க முற்படுகிறது. மத்திய அரசு திட்டமிட்டு மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கிறது. மத்திய அரசின் இந்தப் போக்கு ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்ப்பதாக இருக்கிறது.இவ்வாறு அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.