புதுதில்லி:
2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத் தில் திங்களன்று தாக்கல் செய்தார்.
இதில் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கும், சிறு, குறு தொழில் முனைவோருக்கும், படித்த வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கும் நன்மைஅளிக்கக்கூடிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வங்கி, இன்சூரன்ஸ், பெட்ரோலியம், ரயில்வே,விமானம் என நாட்டின் சொத்துக்கள்அனைத்தையும் தனியாருக்கு விற்பதில் மட்டுமே தீவிரம் காட்டியிருந் தார். விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) என்றபெயரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2ரூபாய் காசுகளும், டீசலுக்கு ரூ. 4-ம் வரி விதித்திருந்தார்.
இதுதொடர்பாக மோடி அரசுக்கு வலுவான எதிர்ப்பும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:“மக்களின் கைகளில் பணத் தைத் தருவதை மறந்து, இந்திய நாட்டின் சொத்துக்களை தனது முதலாளி நண்பர்களுக்கு தாரை வார்க்க,மோடி அரசு வகுத்துள்ள திட்டங்களே2020-21 பட்ஜெட்” என்று ராகுல் காந்திடுவிட்டரில் விமர்சித்துள்ளார்.“இந்த பட்ஜெட் சில பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆதாயம்தருவதாக அமையும். அதேவேளையில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்திருப்பது சாமானிய மக்களின் சங்கடங்களை அதிகரிக்கும்” என்றுதில்லி முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.“நாட்டின் ஏழை மக்கள், உழைக் கும் வர்க்கத்தினர், புலம்பெயர் தொழிலாளிகள், விவசாயிகள், தொழிற்துறையினர் என பலரையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றிவிட்டார்” என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
“மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக்கொண்டது. பாஜக-வினர் தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்குச் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள், ஆனால் நடைமுறையில், அவர்கள் தான் நாட்டின் வளங்களைத் தனியாருக்கு விற்கிறார்கள்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.“தேசத்தை விற்பதற்கான ஒரு சிறு கையேடுதான் இந்த பட்ஜெட். வேறு எந்த கவனமும் இந்தப் பட்ஜெட்டுக்கு இல்லை” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரிகூறியுள்ளார்.“2021-22 பட்ஜெட்டை ஏழைகளுக்கான பட்ஜெட்டாக மாற்ற நிர்மலாசீத்தாராமனுக்கு தைரியம் போதவில்லை.
இந்தியாவை பாஜக திவாலாக்கி வருகிறது. பொது நிறுவனங்களின் சொத்துக்களை 12-15 பெரிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த திசையற்ற பட்ஜெட்டை சில வாரங்களில் மக்கள் மறந்து விடுவார்கள் என்றுமக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகய் விமர்சித்துள் ளார்.“பெரும் பணக்காரர்கள் தவிர மற்றவர்கள் விலை உயர்வு, பெருகும் வேலையின்மை, ஊழல் ஆகியவற்றுடன் போராடுகின்றனர், ஆனால் ஆத்மநிர்பார், தற்சார்பு இந்தியா என்ற பிரச்சாரம் ஜோடனை மொழிதல் மட்டும் சாமானிய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.‘‘இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது அல்ல. இது நாட்டை விற்பதற்கானது. முன்னதாக அவர்கள் ரயில்வேதுறை, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் பல துறைகளை விற்பனை செய்தனர். இப்போது, எரிவாயு குழாய், அரங்கம், சாலைவழிகள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்டவற்றையும் விற்பது பற்றி கூறியிருக்கிறார்கள்’’ என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
“செஞ்சுரி அடிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, ஜீரோவில் ஹிட்விக்கெட் ஆகி அவுட் ஆகிவிட்டார். இதனை நூற்றாண்டின் பட்ஜெட் என்பதை விட நூற்றாண் டின் பெரும் கோளாறு என்றே குறிப்பிட வேண்டும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் சாடியுள்ளார்.“திறமையில்லாத கார் மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம், என்னால் உங்கள் காரின்பிரேக்கை சரி செய்ய முடியவில்லை.எனவே, காரின் ஹாரன் சத்தத்தை அதிகமாக வைத்துள்ளேன் என்று கூறுவதைப் போல பாஜக அரசின் பட்ஜெட் உள்ளது” என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குறிப்பிட்டுள் ளார்.“மோடி அரசு தாக்கல் செய்த இந்தப் பட்ஜெட்டின் கருவே ‘இந்தியாவை விற்போம்’ என்பதுதான். ரயில்வே விற்கப்படும். விமானநிலையங்கள் விற்கப்படும். துறைமுகம் விற்கப்படும். காப்பீட்டுக் கழகம் விற்கப்படும். 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படும்... அவ்வளவுதான்..” என்று திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையன் குறிப்பிட் டுள்ளார்.