திங்கள், மார்ச் 1, 2021

india

img

பஞ்சாபில் ஜனவரி 21 முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு

சண்டிகர், ஜன.19-
பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்களை திறக்கப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் 5 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஜனவரி 21ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

;