india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல் இன்றுடன் நிறைவு  பெறுகிறது!

புதுதில்லி, மே 31- 18-ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடை பெறும் என கடந்த மார்ச் 16 அன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல்  19, ஏப்ரல் 26, மே 7, மே  13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 486 தொகுதி களுக்கு 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், 7ஆவது மற்றும் கடைசி கட்டமாக, பீகாரில் 8, இமாச்சலில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசா வில் 6, பஞ்சாப்பில் 13, உத்த ரப்பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 1  என மொத்தம் 57 தொகுதி களுக்கு சனிக்கிழமையன்று வாக்குப் பதிவு நடை பெறுகிறது. ஒடிசா சட்ட மன்றத்திற்கும் எஞ்சியுள்ள 42 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது.

பள்ளிகள் திறப்பு! ஜூன் 10-க்கு மாற்றம்

சென்னை, மே 31- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன்  6-ஆம் தேதி அரசு பள்ளி களும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற் கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், அனை த்து மாவட்டங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல், கடுமை யாகவே உள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோடை விடு முறையை மேலும் நான்கு நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 6-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்படும் என பள்ளி க்கல்வித்துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

;