புதுதில்லி, மே 14 - ஐ.நா. பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியை இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசிக் கொன்றுள்ளது. ஐ.நா. கொடிகளுடன் தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் போது இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து, அவரைப் படுகொலை செய்துள்ளது.
இந்த தாக்குதலில் மற் றொரு அதிகாரியும் படுகாய மடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்தப் படுகொலை குறித்த அறிவிப்பை ஐ.நா. பொதுச் செயலாளரின் துணை செய்தித் தொடர்பா ளர் ஃபர்ஹான் ஹக் வெளி யிட்டுள்ளார். அதில், “எங்கள் அனைத்து வாக னங்களின் நகர்வுகள் குறித்து இஸ்ரேல் ராணு வத்திற்கு முன் கூட்டியே தெரி வித்த பிறகும் இந்த தாக்கு தலை அவர்கள் நடத்தியுள்ள னர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலால் கொல்லப் பட்டவர் கர்னல் வைபவ் அனில் காலே என்று அடை யாளம் காணப்பட்டுள்ளது. அவர் 2022-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற் றார் என்றும் இரு மாதங் களுக்கு முன்பு தான் ஐ.நா. அமைப்பில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகா ரியாக இணைந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபர் 7 முதல் தற்போது வரை 190 ஐ.நா. ஊழியர்களை, இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய் துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்னல் வைபப் அனில் காலே மரணத்திற்கு வரு த்தத்தை தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் முழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.