india

img

இன்று மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
நாட்டில் மக்களளைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே  13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 
காலை 9 மணி நிலவரப்படி, 11.3% வாக்குகள் பதிவு. அதிகபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 14.35% வாக்குகள் பதிவு; உத்தரப்பிரதேசத்தில் 12.94%, மேற்கு வங்கத்தில் 12.63%, ஜார்க்கண்ட்டில் 12.15%, சண்டிகரில் 11.64%, பீகாரில் 10.58%, பஞ்சாபில் 9.64%, ஒடிசாவில் 7.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. 
 

;