india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குடியிருப்புப் பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முதல்கட்ட சோதனை கேரளா வில் வெற்றி பெற்றுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஓர் தனியார் பள்ளி யில் காணாமல் போன 4 வயது சிறுவன் வியாழனன்று இரவு பள்ளி வளாகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டான். இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலை யத்தின் ஓடுபாதையில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் நல் வாய்ப்பாக விமான பயணிகள் 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

“தென் இந்தியாவில் உத்தரப்பிரதேச மக்களையும், மொழியையும் இழிவு படுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் எனப் பேசுகி றார்கள். தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடது சாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கி ரஸ் கட்சிகள், உத்தரப்பிரதேசத்தை அவமானப் படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட “இந்தியா” கூட்டணியை நீங்கள் மன்னிப்பீர்களா?” என்று கூறிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப் பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, ஸ்வாதிக்கு ஆதரவுக்கரம் நீட்டி அனைத்திற்கும் துணை நிற்பதாக கூறியுள்ளார்.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிப் பதால் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, மூளைக்காய்ச்சல், வலிப்பு நோய்கள், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், ஸ்கிசோப்ரினியா, அல்சைமர் நோய், பார்கின்சன் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக லண்டனைச் சேர்ந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொல்கத்தா
இடி, மின்னலுடன் கனமழை
மேற்கு வங்கத்தில் 
பலி 12 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கணிக்க முடியாத அளவிற்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வியாழனன்று இரவு நிலவரப்படி மாவட்டம் முழுவ தும் இடி, மின்னலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆகவும், 2  பேர் படுகாயத்து டன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு இருந்தனர். வெள்ளியன்று காலை மால்டா மாவட்ட மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலியா னோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்தில் இடி, மின்னலுக்கு 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்
3 பிரச்சாரக் கூட்டங்களும் ரத்து 
ஹரியானாவிலிருந்து ஓட்டம் பிடித்த அமித்ஷா

போராடிய விவசாயிகள் மீதான மோடி அரசின் அடக்கு றையை கண்டித்து பஞ்சாப், ஹரியானாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் பாஜகவினரை விவசாயிகள், பொது மக்கள் விரட்டியடித்து வருகின்றனர். விவ சாயிகளின் எதிர்ப்பு அலையால் ஹரி யானாவின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் உட்பட 7க்கும் மேற் பட்ட பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் வீடு மற்றும் கட்சி அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக விவசாயி கள் விரட்டியடிப்பார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்த பிரதமர் மோடி ஹரியானா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்க ளை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அர சியல் சாணக்கியன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியா னா பிரச்சாரக் கூட்டத்தை ரத்து செய்து ஓட்டம் பிடித்துள்ளார். குருகிராமில் நடை பெறவிருந்த அமித்ஷா பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரோஹ்தக், கர்னால் ஆகிய மக்களவை தொகுதியில் நடைபெறவிருந்த பிரச்சா ரக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பராலா அறிவித்தார்.

புதுதில்லி
கோவாக்ஸின் 
தடுப்பூசி போட்டவர்களுக்கும் 
பக்க விளைவு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு “கோவிஷீல்டு” கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படலாம் என்று தடுப்பூ சியை தயாரித்த ஆஸ்ட்ராஜெனிகா நிறு வனமே கூறியது. ஆஸ்ட்ராஜெனிகாவின் இந்த அறிக்கை மக்கள் மத்தியில் ஏற் படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், “கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம்” என பனராஸ் இந்து பல் கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில்,”கோவாக்ஸின் போட்டுக்கொண்ட 1,024 பேர் கலந்து கொண்டுள்ளனர். கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்ட பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் உடல்நல கோளாறுகளால் அதிகம் பாதிக் கப்படலாம். மேலும், இந்த ஆய்வில் கலந்துகொண்ட 47.9 சதவிகித இளை ஞர்கள் மற்றும் 42.6சதவிகித நடுத்தர வய தினருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற் பட்டுள்ளன. 10.5 சதவிகித பேருக்கு தோல் சம்பந்தமான நோய்களும், 4.7 சதவிகித பேருக்கு நரம்பு சம்பந்தமான கோளாறு களும், 10.2 சதவிகித பேருக்கு பொது வான பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. 5.8 சதவிகித பேருக்கு தசை சம்பந்த மான பிரச்சனைகளும், 5.5 சதவிகித பேருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை களும், 8.9 சதவிகித பேருக்கு பொது வான பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக இந்த ஆய்வில் நடுத்தர வயதினருக்கு 1.6 சதவிகித, பெண்கள்  மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்க ளுக்கு 2.8 சதவிகிதமும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ள தெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவு தொடர்பாக அடுத்தடுத்து ஆய்வுகள் வெளியாகி வருவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.