india

img

அவதூறான விளம்பரங்கள் வெளியிடக் கூடாது பாஜகவிற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் குட்டு

“இந்தியா” கூட்டணிக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவை கண்டு,  மிரண்டு போயுள்ள பாஜக, வெறுப் புப் பேச்சு மற்றும் அவதூறு விளம்  பரம் மூலம் தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தி டம் புகார் அளித்தாலும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்வ தில்லை.

இந்நிலையில், பாஜகவின் அவதூறு விளம்பரம் குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  வழக்கு தொடர்ந்தது. இந்த  வழக்கு திங்களன்று விசார ணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதத்திற்கு பின் கொல்  கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  “விளம்பரம் என்ற போர்வையில்  பாஜகவை எதிர்த்து போட்டியிடு பவர்கள் மீது அவதூறு புகார்கள் முன்வைக்கப்படுகிறது. இது தேர்  தல் நடத்தை விதிகளை மீறும்  செயலாகும். ஆனால் தொடர்ந்து விதிமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு  வரும் பாஜகவுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நட வடிக்கைகள் போதுமானதல்ல. அதனால் ஜூன் 4 வரை தேர்தல்  நடத்தை விதிகளை மீறி திரிணா முல் காங்கிரஸ் குறித்து பாஜக எவ்  வித விளம்பரங்களையும் வெளி யிடக்கூடாது. குறிப்பாக தேர்தல் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பத்திரிகைகள் விளம்பரம் மற்றும் செய்திகளை பிரசுரிக்கக்கூடாது.

இந்திய பத்திரிகை கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப பத்திரிகைகள் செயல்பட வேண்டும்” என உத்தரவிட்டனர். வெறுப்பு, அவதூறு பிரச்சா ரம் செய்வதே பாஜகவினரின் வாடிக்கையாக உள்ள நிலையில்,  கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் பிரதமர் மோடி உள் ளிட்ட பாஜகவினர் கதி கலங்கிப் போயுள்ளனர்.

;