india

img

மசூதிக்கு எதிராக ‘அம்பு’ விட்ட ‘மதவெறி’ மாதவி லதாவை துரத்தியடித்த ஹைதராபாத் மக்கள்

பிரபல தெலுங்கு திரைப்பட பாட கியான மாதவி லதா, மக்கள வைத் தேர்தலில் தெலுங்கானா  மாநில தலைநகரான ஹைதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் பிரச்சாரத்தின்  பொழுது, மசூதி இருக்கும் இடங்க ளில் அதை நோக்கி அம்பு எய்வது  போல சைகை செய்தும், முஸ்லிம்  மக்கள் அதிகம் இருக்கும் இடங்க ளில் சிவன் உள்ளிட்ட சிலைகளை வைத்து பிரச்சார வாகனத்திலேயே பூஜை செய்வதுமாக முற்றிலும் மதவெறிப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். 

ஹைதராபாத் தொகுதியின் வேட்  பாளரும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி யின் சின்னத்தை (பட்டம் சின்னம்) ராமரின் அம்பு தகர்க்கும் என்று கூறி  தொகுதி முழுமைக்கும் அம்பு எய்  வது போல் சைகை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். 

மாதவி லதாவின் இந்த மத வெறிப் பிரச்சாரத்திற்கு முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி, இந்து மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்  பாக ஹைதராபாத் மக்களவை தொகு தியின் மத்திய பகுதியில் இந்து -  முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து  பாஜக வேட்பாளர் மாதவி லதாவை  விரட்டியடித்தனர். இந்த சம்பவத் திற்கு பிறகு கால்நடையாகச் சென்று  பிரச்சாரம் செய்வதை தவிர்த்த மாதவி லதா சாரட் வண்டியை போன்ற  வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண் டார். பிரச்சாரத்தை மக்கள் தொட ர்ந்து கண்டுகொள்ளாத நிலையில்,  வாக்குப்பதிவு நாளில் வன்முறையை  கிளப்பும் நோக்கத்தில் வாக்குச்சாவ டியில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு சோதனை என்ற  பெயரில் வாக்களிக்க வந்த முஸ்லிம்  பெண்களிடம் ஹிஜாப்பை கழற்றி சோதனை செய்து சர்ச்சையை கிளப்  பினார். இதற்கு நாடு முழுவதும் கண்  டனம் கிளம்பியதால் தேர்தல் ஆணை யத்திடம் மன்னிப்பு கோரினார்.

பாஜக வேட்பாளர் மாதவி லதா வின் செயல்களால் கடும் அதிருப்திய டைந்த ஹைதராபாத் மக்கள், தங்க ளின் அதிருப்தியை வாக்குகள் மூலம்  வெளிப்படுத்தினர். செவ்வாயன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை யில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலை வர் அசாதுதீன் ஓவைசியிடம் (வாக்கு கள் - 6,61,981) 3.38 லட்சம் வாக்குகள்  வித்தியாசத்தில் மாதவி லதா (வாக்கு கள் - 3,23,894) படுதோல்வியடைந் தார். அசாதுதீன் ஓவைசி தொடர்ந்து 5ஆவது முறையாக ஹைதராபாத்  மக்களவைத் தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 

கடந்த 35 ஆண்டுகாலம் அசாது தீன் ஓவைசியின் குடும்பத்தினரின் கையில்தான்  ஹைதராபாத் மக்க ளவைத் தொகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;