திங்கள், ஜனவரி 18, 2021

india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்தியாவின் பிரபல WWE குத்துச்சண்டை வீரர் கிரேட் காளி புதன்கிழமையன்று நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

                                         *******************

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் புதன்கிழமையன்று ஆவடியில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். 

                                         *******************

தில்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிசம்பர் 8-ல்இருந்து லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக வட இந்தியா முழுவதும் 8 ஆம் தேதி லாரிகள் ஓடாது என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவி்ட்டால் நாடு முழுவதும் லாரிகளை நிறுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

                                         *******************

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள வி.கே. சசிகலா, விடுதலை சலுகைநிவாரணத்திற்கு சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார்.  சிறைதுறைக்கு விண்ணப்பம் அனுப்பப் பட்டுள்ளது. இதன் மீதான முடிவு நிலுவையில் உள்ளது என்று சிறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

                                         *******************

தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு  வியாழக்கிழமையன்று  செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;