india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திங்கள் கிழமை சக்தி வாய்ந்த இரண்டுகுண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நெடுஞ்சாலை காவல்துறைத் தலைவர் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                          ******************

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஹரியானா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவரு மான ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். 

                                          ******************

கிரேட்டர் ஹைதராபாத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகமுதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

                                          ******************

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 850 ஆசிரியர்கள், போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை அளித்து பதவிஉயர்வு பெற்றிருப்பது கல்வித் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

                                          ******************

பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் தில்லி விவசாயிகள் திங்கள் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

                                          ******************

லடாக் லே பகுதியில் திங்கள்கிழமை  காலை 8.33 மணிக்குநிலநடுக்கம் ஏற்பட்டது. 

                                          ******************

நாட்டில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,337 ஆக உள்ள நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 1,00,55,560 ஆக உயர்ந்துள்ளது.

                                          ******************

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் 10 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

                                          ******************

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள் பரிசாக நகரி எம்.எல்.ஏ நடிகை ரோஜா தாய், தந்தை அற்ற ஒரு ஏழை பெண் ஒருவரை திங்கள்கிழமை காலை தத்தெடுத்தார். 

                                          ******************

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

                                          ******************

பாலிவுட் நட்சத்திர நடிகரான ரிஷி கபூர் ரத்தப் புற்று நோயுடன் போராடி வந்த நிலையில் மும்பையில் வியாழக்கிழமை கால மானார். அவருக்கு வயது 67.

                                          ******************

மெட்ரோ ரயில் பணிமனை யை கஞ்சுமார்க் பகுதியில் அமைப்பது தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண்பதற்கு தயாராக இருப்பதாகவும், அது கவுரவப் பிரச்சனையல்ல என்றும் மகாராஷ்டிரமுதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

                                          ******************

வராக் கடன் சிக்கல்களை கண்டறிந்து அதற்கு தீா்வு காண மத்திய அரசு அதிக அளவில் ‘பேட் வங்கி’களை உருவாக்க வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.

                                          ******************

ஏர் இந்தியாவை தனியார்மய மாக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற வாய்ப்பில்லை என மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

                                          ******************

விவசாயிகளுக்கு ஆதரவளிப்ப வர்களுக்கு எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

                                          ******************

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில்உள்ள மாநிலத்தின் முதலாவது எண்ணெய் வயலில் கச்சா எண்ணெய் உற்பத்திப் பணி தொடங்கியது.

                                          ******************

உடற்பயிற்சி மூலமாக, இளைய தலைமுறையினா் உடல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.

;