india

img

தலித் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக-ஆர்எஸ்எஸ்-சின் கண்ணோட்டம்.... ராகுல் காந்தி கடும் சாடல்

புதுதில்லி:
பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதேபாஜக- ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டமாக உள்ளது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடுமை யாக சாடியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டு பட்டியலினம், பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 மாநிலங்களில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும்60 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வந்த நிலையில், அதில் மத்திய அரசு தனது பங்கை மட்டும் நிறுத்திவிட்டதாகச் செய்தி வெளியானது.இதுகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,  “பழங்குடியினர், பட்டியலினத்தவர்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக -ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டமாக உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்துவதே அவர்களின் வழிமுறைகளை நியாயப்படுத்தும் முடிவாகும் என்று சாடியுள்ளார்.