வியாழன், செப்டம்பர் 23, 2021

india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

கல்லூரிகளில் சாதி  பாகுபாடு கூடாது!

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், அதிகாரிகள் ஆகியோர் மாணவா்களிடையே சாதிப் பாகுபாடு காட்டு வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பட்டியல் வகுப்பு மாணவா்களையும் பழங்குடி  மாணவா்களையும் அவா்களது சாதியை அடிப்படையாக வைத்து எந்த விதத்திலும் தரக்குறைவாக நடத்தக் கூடாது என்று அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி (UGC) செயலா் ரஜனீஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார்.

                                   *****************

காளை மாடுகள்,  எருமைகளுக்கு பாதுகாப்பு!

“நாம் எப்போதாவது பாதுகாப்பாக உணர்வோமா?’’ என்று மக்கள் கேட்டனர். உ.பி.யின் மேற்குப் பகுதிகளில் காளை மாடுகளும் எருமைகளும் கூட பாது காப்பற்ற நிலையில் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். காளைகளும் எருமைகளும் கூட பாதுகாப்பாக உள்ளன” என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.

                                   *****************

மசூதியில் வழிபட்டு மம்தா பிரச்சாரம்!

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிடும், திரிணாமுல் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, செவ்வாயன்று சோலா அனா மசூதியில் வழிபாடு நடத்திவிட்டு, தனது பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளார். இதனை விமர்சித்துள்ள பாஜக, பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலுக்கு கிடை க்கும் மக்கள் ஆதரவே, மசூதியிலிருந்து பிரச்சாரத்தை துவங்கும் நிலைக்கு மம்தாவை தள்ளியிருப்பதாக கூறியுள்ளது.

                                   *****************

முதல்வர்கள் எல்லாம் அச்சத்தில் உள்ளனர்!

எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சராக முடிய வில்லை என கவலை. அமைச்சர்களுக்கு நல்ல துறை கிடைக்கவில்லை என கவலை. நல்ல துறை கிடைத்தவர்களுக்கு முதல்வராக முடியவில்லை என கவலை. முதல்வர்களுக்கு, எவ்வளவு காலம் இந்த பதவியில் நீடிப்போம் என்ற கவலை. இப்படி அரசியல்வாதிகளுக்கு நிம்மதியே கிடையாது என்று ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். உத்தரகண்ட், கர்நாடகா, குஜராத் என பாஜக தலைமை முதல்வர்களை மாற்றிவரும் பின்னணியில் கட்காரி இவ்வாறு கூறியுள்ளார்.

                                   *****************

சமாஜ்வாதிக்கு தாவும் உ.பி. பாஜக எம்எல்ஏ? 

“எம்எல்ஏ என்ற வகையில் என்னால் தொகுதிமக்களுக்கு உதவ முடியவில்லை. அரசு அதிகாரி கள் ஒத்துழைப்பது இல்லை. இதுகுறித்து வெளிப்படையாக பேசினால், என்மீதே தேசத்துரோக வழக்கு பாயுமோ? என்ற அச்சம் உள்ளது. உ.பி. மாநிலத்தில், அனைத்து பாஜக எம்எல்ஏ-க்களின் நிலையும் இதுதான்!” என்று சீதாப்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராகேஷ் ரத்தோர் அண்மையில் பேசியிருந்தார். இந்நிலையில், அவர் திடீரென சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷை சந்தித்து பேசியுள்ளார். இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;