புதுதில்லி:
நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 8) துவங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடரின் முதற்கட்ட கூட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைந் தது. இந்நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாம் கட்ட கூட்டம் இன்று மீண்டும்கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டமுக்கிய மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.