india

img

ஏர்முனையின் போர் முனையில்...

தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் சாமி. நடராஜன், துளசி நாராயணன் மற்றும் பிரசன்னா ஆகியோர் டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமையன்று  தில்லியில் போராடும் விவசாயிகள் மத்தியில் சென்று அவர்களைப் பேட்டி கண்ட காட்சிகளை இங்கே பதிவு செய்கிறார்கள்...

1     வீல் சேரில் அமர்ந்திருக்கும் தோழருக்கு ஒரு கால் கிடையாது. செயற்கைக்கால் பொருத்தியுள்ளார்.  இதனுடனேயே அவர் போராட்டம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

2    பதாகை ஏந்தியவண்ணம் உள்ள இருவரும் பஞ்சாப்பைச் சேர்ந்த சிறுவர்கள்.  இவர்களிடம் விசாரித்தபோது ஒருவன் எல்கேஜி படிக்கிறான், மற்றொருவன் 4ஆம் வகுப்பு படிக்கிறான். தங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம் என்றும், மோடி கொண்டுவந்துள்ள சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என்பதால் குடும்பத்துடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

3    இப்படத்தில் பார்ப்பது ஒரு முகாம். இதேபோன்று பல முகாம்கள் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. பலர் தாங்கள் வந்த டிராக்டர்களையே மேலே மூடி டெண்ட் (முகாம்) போல மாற்றி அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. சமையல் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. பசி வந்தவர்கள் சென்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று பேச்சுக் கொடுக்கும்போது, ஓராண்டு ஆனாலும் மோடி இந்த சட்டங்களை ரத்து செய்தால்தான் இந்த இடத்தை விட்டு நகர்வோம் என்ற உறுதியுடன் பதில் சொல்கிறார்கள்.

4    மற்ற படங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள். இவர்கள் அனைவருமே  மோடி எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், எங்களைப் போன்ற விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்று உறுதியுடன் கூறுகிறார்கள்.

5    விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உறவினர்கள். தில்லியில் வசிப்பவர்கள் நாள்தோறும் வந்து சந்தித்துவிட்டு செல்கிறார்கள். 
 

;