திங்கள், ஜனவரி 25, 2021

india

img

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானியர்கள்.... உ.பி. பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் சொல்கிறார்

லக்னோ:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி விரைவில் துவங்கும் என்று மோடி அரசு அறிவித்துள்ள நிலையில், உரிய பரிசோதனைகள் நடத்தப்படாமலேயே தடுப்பூசி போடுவது ஆபத்து என்றும், இதில் அவசரப்படக் கூடாது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ‘அஸ்ட்ராஜெனெகா’ (Oxford - AstraZeneca vaccine) நிறுவனமும் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ (Covi shield) தடுப்பூசிக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமியே எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கும் மேலாக, மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால், பிரதமர் மோடியே முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டனர். இந்நிலையில்தான், கொரோனா தடுப்பு மருந்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்லலாம் என்று உ.பி. பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியுள்ளார்.  இதேபோல உ.பி. பாஜக ஆட்சியில் நடைபெறும் என்கவுண்ட்டர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, என்கவுண்ட்டர்கள் பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு பரந்த அறிவு இல்லாதவர்கள் என்றும் பேசியுள்ளார்.

;