அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் இரண்டாம் ஆண்டில், புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். கருப்பின அமெரிக்கர்களுக்கு பாரக் ஒபாமா ஜனாதி பதியானது முன்னேற்றம் அல்ல, மாறாக வெள்ளையர்களுக்குத்தான் அது முன்னேற்றம் என்றார். ஏனெனில் தகுதியான கருப்பினத் தலைவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டன. இது அமெரிக்க அரசியலின் அடிப்படை முரண்பாடுகளில் ஒன்றான இனப் பிரச்ச னையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இப்போது, ஒரு பெண் வேட்பாளரின் தோல்வி யைக் கண்டபின், பாலினம் மற்றொரு முக்கிய சமூகப் பிளவா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக கமலா ஹாரிஸ் எதிர்கொண்ட சவால்கள் இரட்டை அடுக்கு கொண்டவை - அவர் ஒரு பெண் என்பதோடு மட்டுமல்லாமல், கருப்பின பெண் என்பதால் இரண்டு தளங்களிலும் போராட வேண்டியிருந்தது.
2022ல் மகப்பேறு உரிமைகள் குறித்த ரோ(எதிர்) வேடு (Roe vs Wade) வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது பழமைவாதிகளின் மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் சுய நிர்ணய உரிமையை மீட்பதற்கான கமலா ஹாரிஸின் பிரச்சாரம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வில்லை. 2020ல் நடந்த தேர்தலில் அவர் ஜோ பைடனை விட குறைவான பெண்களின் வாக்கு களையே பெற்றார். கருக்கலைப்பு உரிமை போன்ற முக்கிய விவகாரங்களில் பெண்களை ஒன்றிணைக்க அவரால் முடியவில்லை.
மேலும் பெண் வேட்பாளர்கள் மீதான வெறுப்புச் சதிகள் மிகவும் ஆபத்தானவை. ஹிலாரி கிளிண்டனும் கமலா ஹாரிஸும் “மந்திரவாதிகள்” என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினர். இது பெண்களைக் குறிவைத்து மட்டுமே ஏற்படுத்தப்படும் தனிப்பட்ட அவ தூறாகும். பாலின சமத்துவமின்மை போன்ற பிரச்சனைகளில் அமெரிக்க சமூகம் உணர்ச்சிப் பூர்வமாக செயல்படாத நிலை காணப்படுகிறது. இதனால் பெண் வேட்பாளர்கள் தங்கள் மீதான அவதூறுக் கருத்துக்களை நேரடியாக எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
வரும் தசாப்தங்களில் வெள்ளை மாளிகை யில் ஒரு பெண் ஜனாதிபதியைக் காண்போமா என்ற கேள்வி எழுகிறது. இரு முக்கிய கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் போட்டி யிடுவது சாத்தியமே. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியை பெரிதும் மாற்றியமைத்துள்ளார். அக் கட்சி இப்போது மிக ஆழமாக சமூக பழமை வாதத்தில் மூழ்கத் துவங்கியுள்ளது. இது பெண் வேட்பாளர்களுக்கான சவால்களை மேலும் அதிகரிக்கிறது. இது பாசிசத்தின் ஒரு நிலை ஆகும்.