headlines

img

கும்பமேளாவில் சாமியார்களின் வெறிக்கூச்சல்

கும்பமேளாவில்  சாமியார்களின் வெறிக்கூச்சல்

ஹரித்வார் கும்பமேளாவுக்கு பிறகு, பிரயாக்ராஜ் (முந்தைய அலகாபாத்)  கும்பமேளா விலும் வகுப்புவாதத்தின் தாக்கம் அதிகரித்து வரு கிறது. அகடா பரிஷத்  (துறவிகளின் சம்மேளனம்), முஸ்லிம்கள்  கும்பமேளாவில் பங்கேற்க மட்டு மல்ல கும்பமேளா நடைபெறும் இடங்களில் கடை கள் வைப்பதற்கும் தடைவிதித்துள்ளது. இதை அப்படியே மாவட்ட நிர்வாகமும் உத்தரப்பிரதேச அரசும் அச்சு பிசகாமல் அமலாக்கி வரு கின்றன. இப்படி செய்வதன் மூலம் மக்களிடையே வகுப்புவாத அடிப்படையில் பிளவையும் விரோ தப் பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்துள்ளனர். மேலும், துறவிகளின் தலைவர் ரவீந்திர புரி, சனாதன வாரியம் அமைக்க அழைப்பு விடுத் துள்ளார். தற்போது முஸ்லிம்களின் கட்டுப் பாட்டில் உள்ள அனைத்து மடங்கள் மற்றும் கோவில்களை மீட்டெடுக்க இந்த வாரியம் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜோதிஷ் பீட சங்கராச்சாரியார் அவி முக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, ‘சாமியார்களின் நாடாளுமன்ற’ கூட்டத்தில் ராகுல் காந்தி மீது பாய்ந்துள்ளார். அவர் முன்மொழிந்துள்ள கண்டன தீர்மானத்தில், “எங்களுடைய கும்ப மேளாவில் உங்களுக்கு [முஸ்லிம்] என்ன வேலை?” என்ற  கேள்வியை தொடுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி,  மக்களவையில் ஹாத்ரஸ் பாலியல் வன்கொ டுமை தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, “ பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் வெளியே சுதந்திரமாகத் திரிய வேண்டும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தி னர் சிறையில் இருக்க வேண்டும்” என்று மனுஸ் மிருதியில் எழுதப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி னார். அதற்குதான் இந்த சாமியார், பொங்கியி ருக்கிறார். மேலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் இந்து மதத்திலிருந்து வெளி யேற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  

ஜூனா அகோராக்களின் தலைவரான நரசிம்மானந்த் தொடர்ந்து வெறுப்பூட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.  அதன் தலைமைப் புரவலரான மஹந்த் ஹரி கிர், பிரதம ருக்கு எழுதிய கடிதத்தில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை களைத் தொடங்க வேண்டும் என்றும் அந்த நாடு களில் இந்துக்களுக்கு தனி தேசத்தை நிறுவும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்படவேண் டும் என்றும் போருக்கு தூபம் போட்டுள்ளார். 

இதற்கு  வெளியுறவுத்துறையோ ஒன்றிய அரசோ மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆர்எஸ்எஸ்- பாஜகவின் ராமர் கோவில், 370ஆவது பிரிவு நீக்கம் ஆகியவை முடிந்துவிட்டதால் இந்து, முஸ்லிம் மக்களுக்கு இடையே பெரும் மோதலுக்கு சாமியார்கள் திட்டமிடுகிறார்கள். இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும், சாமியார்களின் கோரிக்கை குறித்து ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும்.