போலி நிறுவனங்கள் குறித்து நீதிமன்றங்களு க்கு வழக்குகள் வருவது உண்டு. ஆனால் பாஜக தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் போலி நீதிமன்றமே ஐந்தாண்டு களாக நடத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவர் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை உரு வாக்கி போலி எழுத்தர்கள், போலி வழக்கறிஞர்க ளையும் நியமித்து வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த ஒருவர் இந்த போலி நீதிமன்றத்தை நாடியுள் ளார். அவருக்கு அரசு நிலத்தை பத்திரப் பதிவு செய்து தர போலியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் நிறை வேற்றவில்லை என்று கூறி மனுதாரர் அகமதா பாத் உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோதுதான் இந்த போலி நீதிமன்ற விவகா ரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘குஜராத் மாடல்’ என்று பாஜககாரர்கள் பீற்றிக் கொள்ளும் குஜராத் மாநிலத்தில் போலி டோல் கேட் அமைத்து அம்ரிஷ் படேல் என்பவர் ஒன்றரை ஆண்டில் ரூ.1.5 கோடி ரூபாய் அளவிற்கு சுருட்டியிருக்கிறார். இதே குஜராத் மாநிலத்தில் ஒருவர் போலி அரசு அலுவலகம் அமைத்து ரூ.4 கோடி வரை மோசடி செய்த அதிர்ச்சி செய்தியும் அண்மையில் வெளியானது.
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் சபோரா என்ற கிராமத்தில் போலியாக ஸ்டேட் பேங்க் கிளையை உருவாக்கி பலரை பணியில் சேர்ப்பதா கக் கூறி மோசடி செய்த தகவலும் வெளியானது.
இத்தகைய மோசடி கும்பல்கள் எல்லா இடங்க ளிலும் இருக்கவே செய்கிறார்கள். ஆன்மீகத்தின் பெயரால் மக்களிடமுள்ள இறை நம்பிக்கையை ஏமாற்றி பிழைக்கும் போலிச் சாமியார்கள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.
நித்தியானந்தா என்ற ஆசாமி எங்கே இருக் கிறார் என்பதே மர்மமாக இருக்கிறது. நித்தியா னந்தா தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுத்துக் கொண்டி ருக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவிக்கும் அளவுக்கு அவரது வகையறாவின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு புறத்தில் கோவையில் காடுகளை அழித்து ஆசிரமம் நடத்திவரும் ஈஷா மையத்தில் தகன மேடை இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சி யளிப்பதாக இருந்தது. தொடர்ந்து புகாரில் சிக்கி வரும் ஈஷா மையம் மேலிட ஆசியுடன் தொடர்ந்து தப்பித்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் போலிகள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தான் விழிப்போடு இருந்திட வேண்டும்.