headlines

img

நாட்டுக்குப் பயன் தராத மோடி- டிரம்ப் பேச்சுக்கள்

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் 

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியிருக் கிறார். வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை சந்தித்துப் பேசி னார். இருவரும் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக பேசினாலும் அமெரிக்கா வின் ஆயுதங்களை இந்தியாவின் தலையில் கட்டுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்தியாவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்யும் என்று டிரம்ப் அறிவித்துள் ளார். மேலும் எப்.35 ஸ்டெல்த் ரக போர் விமானங்க ளையும் எரிவாயுவையும் விற்பனை செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எப் 35 ரக விமானங்களை விட  ரஷ்யாவின் சுகோய் 57 ரக போர் விமானம் பல மடங்கு சக்தி வாய்ந்தது. பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் விமான கண்காட்சியிலும் இந்த விமானம் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்தியாவுக்கு இந்த விமானங்களை விற்பனை செய்ய  ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (யுஏசி) மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் ஆகியவை முன்வந்துள்ள நிலையில் டிரம்ப் அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஷ்ய நிறுவனம் அந்த விமானத்தை இந்தியாவில் - அதாவது பெங்க ளூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ் தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் தயாரிக்க வும் அதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்கவும் முன்வந்துள்ளது. இதனால் இந்தாண்டு இறுதிக்குள்  சுகோய் 57 ரக விமானம் இந்தியாவில் தயாராகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமெரிக்க ஆயுத வியாபாரி களின் நிர்பந்தத்தின் பேரில் மோடியிடம் அந் நாட்டின் எப்  35 ஸ்டெல்த் போர் விமானத்தை வாங்கிக் கொள்ள பேரம் பேசுகிறார். மேலும் வரும் இலையுதிர் காலத்திற்கு முன்பு வர்த்தக ஒப்பந்தத் தில் கையெழுத்திடவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள் ளது.அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீது டிரம்ப் 30 முதல் 70 விழுக்காடு வரை கடுமையாக வரி விதித்துள்ளார். அந்த வரியை குறைத்துக்கொள்ள அவர் ஒப்புக் கொள்ளாத நிலையில் அமெரிக்காவுடன் இந்தியா எப்படி கையெழுத்திட முடியும்?

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை மூலம் ஈடுசெய்ய முடியும் என்று  அமெ ரிக்கா கூறுகிறது. இதுவும் இந்தியாவுக்கு பாதகமா கவே முடியும். காரணம், பூகோள ரீதியில் ரஷ்யா, ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகள் இந்தியா வுக்கு அருகில் உள்ளன. அங்கிருந்து குறைந்த விலையில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோ லியப் பொருட்களை இந்தியா வாங்கி வரும் நேரத் தில் அமெரிக்காவிடம் இருந்து வாங்குவது என்பது இந்தியாவுக்கு  பெரும் நிதிச்சுமையையே ஏற்படுத் தும். எனவே மோடி -  டிரம்ப் வர்த்தகப் பேச்சுக்கள் நம் நாட்டிற்கு எந்த வகையிலும் பயன்தராது.