headlines

img

பொய்க் கணக்கே மிஞ்சும்

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு நாட்டில் உள்ள 500 பெரும் நிறுவனங்களில் பயிற்சியாளர் என்ற முறை யில்  வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம்  குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கிடைக்கச் செய்யும் விதத்திலும் தொடர்ந்து அப்பயிற்சியின் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் விதத்திலும் ஏற்பாடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் மோடி  அரசு அறிவித்தது.

அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிறு வனங்களுக்கு அரசு அந்த நிதியை அளித்து, நிறுவனங்கள் மூலமாக திட்டம் செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே  மாதத்தில் அத்திட்டம் வேறு திசையில் பயணித்துள் ளது. அதன்படி அரசும் நிதியளிக்காது; பெரும்  நிறுவனங்களும் இளைஞர்களை ஊழியர்களாக, தொழிலாளர்களாக நியமித்து - அந்த அடிப்படை யில் ஊதியம் தராது. 

மாறாக பெரும் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய, ‘கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி’யில்  இருந்து ஒரு கணிசமான தொகையை இத்திட்டத் திற்கு ஒதுக்கி அதன் மூலம் ஊதியம் கொடுப்பது என கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மூலமாக மோடி அரசு அறிவித்துள்ளது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி அளிப்பதற் கான விதிகளில் இதற்கு ஏற்றவாறு உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்வது என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

ரூ.500 கோடி வணிகம் அல்லது ரூ.1000 கோடி விற்பனை அல்லது ரூ.5 கோடி நிகர லாபம் கொண்ட அனைத்து நிறுவனங்களும் அவசியம் தங்களது மூன்றாண்டு சராசரி நிகரலாபத்தின் அடிப்படையில் 2 சதவீத நிதியை கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியாக ஒதுக்க வேண்டும்; அந்த தொகையை, பட்டினி ஒழிப்பு, கல்வி வளர்ச்சி,  பாலின சமத்துவ நடவடிக்கைகள் உள்பட சமூக முன்னேற்றத்திற்கான 12 குறிப்பிட்ட துறைகளில் செலவிட வேண்டும் என்பது விதியாகும். இந்த விதியில்தான் தற்போது மோடி அரசு திருத்தம் செய்து, மேற்கண்ட நிறுவனங்களில் இளைஞர் களை பயிற்சியாளர்களாக எடுத்து, அவர்களுக்கு அரசு குறிப்பிட்ட பயிற்சித் தொகையையும் இந்த  நிதியிலிருந்து அளிக்கலாம் என விதியை மாற்றுகிறது. 

இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று,  பட்ஜெட்டில் அளித்த உறுதியை மோடி அரசு  முற்றாக கைவிடுகிறது; நாட்டின் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொறுப்பி லிருந்து கமுக்கமாக வெளியேறுகிறது. மற்றொ ன்று, ஏற்கெனவே கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியை நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் விதிப்படி அமலாக்கவில்லை. 2022ஆம் நிதியாண்டில்  2.02 சதவீத நிதியை சமூக நட வடிக்கைகளுக்காக செலவழித்த நிறுவனங் கள், 2023ஆம் நிதியாண்டில்  1.8சதவீதம் மட்டுமே செலவழித்துள்ளன. இப்போது  மோடி அரசு  கூறும் திட்டத்தால், சமூக முன்னேற்றத்திற் கான எந்த நடவடிக்கைக்கும் கார்ப்பரேட் நிறு வனங்கள் செலவழிக்காமல், வேலைவாய்ப்பு அளித்ததாக  பொய்க்கணக்கு எழுதப்போகின்றன.