மதச்சார்பற்ற அரசை கேள்விக்குறியாக்கிய மம்தா
மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலமான திகா. இங்கு மேற்கு வங்க மாநில அரசு சார்பில் ரூ.250 கோடி செலவில் 22 ஏக்கர் பரப்பளவில் ஜெகநாதருக்கு மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த கோவில்.
மதச்சார்பற்ற தன்மையோடு நடந்து கொள்ள வேண்டிய ஒரு மாநில அரசு, ஒருகுறிப்பிட்ட மதத்தை சர்ந்த கடவுளுக்கு கோவிலை கட்ட லாமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கோவில் கட்டியதோடு மட்டுமல்லாமல் திறப்பு விழாவையொட்டி சிறப்பு யாகங்களும் மாநில அரசின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திரமோடி ராம ரின் சேவகராக, அயோத்தியின் கருவறைக்குள் சடங்குகளைச் செய்தார். அதுபோல ஜெகநாதரின் புரவலர் என்ற முறையில் மம்தா, யாகசாலை பூஜை கள் மற்றும் ஆரத்திக்கு தலைமை தாங்கினார்.
இந்த கோவில் கலாச்சார வெற்றியின் அடை யாளம் என்று மம்தாவும் அவரது ஆதரவாளர்க ளும் கூறி வருகிறார்கள். ஆனால் கோவிலின் அதி காரப்பூர்வ ஆவணத்தில் ஜெகநாதர் கோவில் என்றும் சமஸ்கிருத மையம் என்றும் கூறப்பட்டுள் ளது. அதாவது ஒரு மதப் பின்னணியுடன் கூடிய ஒரு கலாச்சார நினைவுச்சின்னமாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. எந்த மதத்துடனும் இணைத்து கொள்ளாத வகையில் ஒன்றிய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மதம் சார்ந்த அமைப்புகள் பக்தர்களி டம் நிதி திரட்டி கட்டப்படும் கோவில் விழாக்களில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பதை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.
அரசாங்கமே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக அரசு செலவில் கோவில் கட்டுவது அரசியலமைப்பின் 27 ஆவது பிரிவை மீறும் செயலாகும். ஒரு மதத்தை மேம்படுத்த பொது நிதியை எடுத்து பயன்படுத்த அந்தப் பிரிவு தடை செய்கிறது. மதச்சார்பற்ற இந்திய குடியரசில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர், வேத யாகங்கள் முதல் சிலை பிரதிஷ்டை வரை வரி செலுத்துவோர் பணத்தை மத சடங்குக ளுக்கு ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. மேலும் மேற்குவங்க அரசு கூறுவதைபோல் இது கலாச்சாரப் பாதுகாப்பு அல்ல. இது பெரும் பான்மை மதத்தை ஊக்கப்படுத்தும் செயலாகும்.
ராமநவமி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது, கங்கா ஆரத்தி எடுத்தது, ஹூக்ளி யில் கும்பமேளா நடத்தப்போவதாக அறிவித்துள் ளது ஆகியவை பாஜகவுக்கு போட்டியாக பெரும் பான்மை இந்து மக்களை திருப்திப்படுத்த மம்தா கையாண்டுள்ள தவறான வழியாகும். மோடி யின் அயோத்தியும் மம்தாவின் திகாவும் தேர்தல் நாட்காட்டிகளைச் சுற்றி வடிவமைக்கப் பட்டவை. அது மக்களவைத் தேர்தல் என்றால் இது சட்டமன்றத் தேர்தல்.