headlines

img

தொடரத் தகுதியற்ற ஆதித்யநாத் அரசு

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் அமைந் துள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பிரிவில் ஏற்பட்ட கொடூர தீ விபத்து, மாநில பாஜக அரசின் மருத்துவக் கட்டமைப்பின் சீரழிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நவம்பர் 15 அன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல பச்சிளம் சிசுக்கள் பலியாகின. தர்மேந்திர குஷ்வாஹா – பாக்வதி தம்பதியரின் மூன்று வயது குழந்தை உட்பட பலர் காயம டைந்தனர். “என் குழந்தை உயிருடன் இருந்த போது, திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் எல்லாமே மாறிவிட்டது,” என கண்கலங்கினார் தர்மேந்திர.

மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டும் 15 குழந்தைகள் அனுமதிக்கப் பட்டிருந்தன. ஒரே நேரத்தில் 30-40 குழந்தைகள் வரை சிகிச்சை பெறும் இந்த வார்டில், அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட இல்லை என்பது அதிர் ச்சி தரும் தகவல். 2005-ல் வாங்கப்பட்ட தீயணைப்பு கருவிகள் செயலிழந்த நிலையில் இருந்தன.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் சுகாதாரத்துறை செயல்பாடு கேள்விக் குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இதே மருத்துவமனையில் 4.14 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த தவறிய பாஜக அரசின் அலட்சியம் வெளிப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளின் படி, ஒவ்வொரு 1000 பேருக்கும் குறைந்தது 3 மருத் துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை. பின் தங்கிய பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது.

“கடந்த 12 வருடங்களாக இந்த வார்டு இயங்கி வந்தது. பல முறை மேல் அதிகாரிகளிடம் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை,” என்கிறார் மருத்துவர் சேனகர். அரசின் அலட்சியம் காரண மாக பணியாளர்கள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை, உபகரணங்கள் பற்றாக்குறை என அனைத்து நிலைகளிலும் பின்தங்கிய நிலையி லேயே மருத்துவமனை இயங்கி வருகிறது.

சமூக ஆர்வலர்கள், “பணக்கார – ஏழை என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும். அரசின் கவனக் குறைவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்புகின்றனர்.

எதிர்க்கட்சிகள், “பொது சுகாதார கட்டமைப் பை மேம்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மருத்துவ சேவையை தனியார்மயமாக்கும் கொள்கையால், ஏழை-எளிய மக்களின் உயிர்கள் பறிபோகின்றன,” என குற்றம்சாட்டியுள்ளன.

இந்த சோகம் நமக்கு உணர்த்தும் கசப்பான உண்மை – அரசியல் லாபத்துக்காக பொது சுகா தாரத்தை புறக்கணிப்பதன் விளைவு கொடூர மானது. ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலை மதிப்பற்றது – அதைக் காக்கத் தவறும் ஆட்சி தொடர தகுதியற்றது!