headlines

img

காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெற்று தீவிரவாதிகளை தனிமைப்படுத்துக!

காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெற்று தீவிரவாதிகளை தனிமைப்படுத்துக!

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதி யில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவம், இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதல், திட்ட மிட்ட படுகொலை என்பது தெளிவாகிறது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் பயணிகள் சிதறி ஓடுவதற்கு பதிலாக, அவர்கள் பயங்கரவாதிகளை  நோக்கி திருப்பி விடப்பட்டனர் என்ற புதிய அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், இந்திய அரசு பாகிஸ்தானு டனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது, இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை விதித்தது, அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்தியது போன்ற நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 14 வகையான விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கை மிக முக்கியமான பல அம்சங்களை சுட்டிக்காட்டுகிறது.

முதலாவதாக, இந்த தாக்குதல் பெரும் பாதுகாப்பு குறைபாட்டின் விளைவு என்பதை அடையாளம் காட்டுகிறது. “உரிய விசாரணை நடத்தி பொறுப்பை நிர்ணயிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, காஷ்மீர் மக்கள் இந்த தாக்குதலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தது மிக முக்கியமான நிகழ்வு. “பள்ளத்தாக்கு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த மக்களின் உணர்வை அடிப்படையாக கொண்டு தீவிரவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும்” என்கிறது கட்சி.

மூன்றாவதாக, சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளுக்கு எதிராக நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரத்தை கட்சி கடுமை யாக கண்டிக்கிறது. “இத்தகைய மதவெறி கொண்ட வர்கள் மக்களை பிரிக்கும் தீவிரவாதிகளின் நோக்கத்திற்கே உதவுகிறார்கள்” என்று எச்சரிக்கிறது.

அதேவேளை மார்க்சிஸ்ட் கட்சி இராணுவ நட வடிக்கை குறித்து எச்சரிக்கையாக உள்ளது. “எல்லை தாண்டிய தீவிரவாதத்தை கட்டுப்படு த்தும் நோக்கத்தை இராணுவ பதிலடி நிறை வேற்றுமா, தடுப்பு சக்தியாக செயல்படுமா என்பதை அரசாங்கம் தீவிரமாக ஆராய வேண்டும்” என்கிறது.

மாறாக, தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, ஆதாரங்களை சேகரித்து சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்சி வலியுறுத்தியுள்ளது.

தீவிரவாதத்திற்கு உறுதியான பதிலடி கொடுக்க வேண்டும், அதே நேரத்தில், அப்பாவி மக்களை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது. காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களை தீவிரவாதத் திற்கு எதிரான போராட்டத்தில் பங்காளிகளாக்கு வதே நிரந்தர தீர்வுக்கு வழி.