headlines

img

எரியும் கொள்ளியில் மோசமான கொள்ளி

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 47வது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றி ருக்கிறார். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 6 ஆம் தேதியன்றுதான் வெளியாகும். இருந்தாலும், மாகாணங்களில் பெற்ற வாக்கு களின் அடிப்படையில் யாருக்கு வெற்றி என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. 

டொனால்டு டிரம்புக்கும், தற்போதைய ஜனாதி பதி ஜோ பைடனுக்கும்தான் போட்டி என்றுதான் களம் தயாரானது. அதன்படியே வேட்பாளர்க ளுக்கிடையிலான முதல் விவாதம் நடந்தது. இதில் டிரம்ப்பும், பைடனும் பங்கேற்றனர். இதில் பைடன் திணறியதால், ஒட்டுமொத்த ஜனநாய கக் கட்சியே அவரை மாற்றும் முடிவுக்குச் சென்றது. கமலா ஹாரிஸ் களத்தில் நுழைந்தார்.

தாமதமாகத் தேர்தலில் பிரச்சாரத்தில் இறங்கினாலும், வேட்பாளர் மாற்றத்தால் மீண்டும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல, டிரம்ப்பு க்கு ஆதரவு அதிகரித்தது. இருந்தாலும், போட்டி மிகவும் நெருக்கம் என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. கருத்துக் கணிப்புகளும் அதையே எதிரொலித்தன. ஆனால் தற்போது வெளியாகி யுள்ள தேர்வு முடிவுகள், டிரம்ப்புக்குதான் மக்கள் ஆதரவு தந்துள்ளனர் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் இரு கட்சிகளைத் தாண்டிய அரசியல் சக்தி என்பது இன்னும் வெறும் கனவா கவே இருந்து வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் அதற்கான முயற்சி நடக்கிறது. தற்போ தும் சுமார் 20 லட்சம் வாக்குகள் பிற வேட்பாளர்க ளுக்குக் கிடைத்திருக்கிறது. டிரம்ப்புக்கு ஆதரவா கப் போட்டியிலிருந்து விலகிக் கொண்ட ராபர்ட் கென்னடிக்கு ஐந்து லட்சம் பேர் வாக்களித்துள்ள னர். அவர் எழுப்பிய பிரச்சனைகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பிடிவாதமாக அவருக்கு வாக்க ளித்திருப்பதாகத் தெரிய வருகிறது. இடதுசாரிக் கொள்கைகளை வலியுறுத்தும் பெர்னி சாண்ட ர்ஸ் மீண்டும் செனட் உறுப்பினராகத் தேர்வு செய் யப்பட்டிருக்கிறார்.

பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட தலைப்புகள் இரு கட்சிகளின் பிரச்சாரங்களின் மையப் பொருட்களாக இருந்தன. உலக அமைதி, பிற நாடுகளில் தலையீடு, ஐ.நா. சீர்திருத்தம், சுதந்திர வர்த்தகம், ஜனநாயகச் சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளில் இரு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. ஆயுதங்களைத் தயாரிக்கும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமா கவே இரு கட்சிகளும் உள்ளன. விற்பனையை அதிகரிக்கும் வகையில் உலகம் முழுவதும் அமை தியைக் குலைப்பதே இருவரில் யார் பொறுப்பேற் றாலும் அவர்களின் பிரதான வேலையாக இருக்கும். 

எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று தேர்வு செய்ய வேண்டிய நிலையில், அந்நாட்டு மக்கள் எரிகிற கொள்ளியில் மோசமான கொள் ளியை தேர்வு செய்திருக்கிறார்கள்.