மகாராஷ்டிரா தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு விவரங்கள் ஜனநாயகத்தின் மீதான கடும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகின்றன. மோடி அரசின் ஜனநாயக விரோத முகத்தையும் அம்பலப்படுத்துகின்றன. வாக்குப்பதிவு முடிந்த நவம்பர் 20 அன்று மாலை 5 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும் இடையே 76 லட்சம் வாக்குகள் திடீரென அதிகரித்துள்ளன. 5 மணிக்கு 58.22% ஆக அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு, இரவு 11.30க்கு 65.02% எனக் கூறப்பட்டு, வாக்கு எண் ணிக்கை நாளான நவ.23 அன்று 66.05 % ஆக அறிவிக்கப்பட்டது. இந்த 7.83% அதிகரிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிலானது.
ஜார்க்கண்டில் இதே காலகட்டத்தில் வெறும் 1-2% மட்டுமே அதிகரித்தது. ஹரியானாவில் 6.7% அதிகரித்த நிலையில் பாஜக வென்றது. உத்தரப் பிரதேச தொகுதிகளில் 0.5%க்கும் குறைவாக அதிகரித்த நிலையில் இந்தியா கூட்டணி வென்றது. இந்த முரண்பாடு, பாஜக ஆட்சியதி காரத்தின் கைகள் தேர்தல் ஆணையத்தின் மீது நீண்டிருப்பதை உணர்த்துகிறது.
ஒரு வாக்காளருக்கு ஒரு நிமிடம் என்றாலும், 76 லட்சம் பேர் வாக்களிக்க 16.6 நாட்கள் தேவை. ஆனால் 6.5 மணி நேரத்தில் இவ்வளவு வாக்குகள் எப்படி பதிவானது? ஒரு வாக்குச்சாவடியில் சரா சரி 1000-1200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க முடியும். அப்படியிருக்க இந்த எண்ணிக்கை எப்படி சாத்தியம்?
இது, மகாராஷ்டிராவை தொடர்ந்து தங்க ளது அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதன் மூலம், மோடி அரசு தனதுஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் சதித்திட்டங்களில் ஒன்றாகவே தெரி கிறது. ஏனென்றால் மகாராஷ்டிராவில் இவர்கள் தோல்வியடைந்தால், மத்தியில் முட்டுக் கொடு த்துக் கொண்டிருக்கும் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் சற்று திசைமாறும் ஆபத்து இருக்கிறது அல்லவா?
மகாராஷ்டிரா மோசடி தொடர்பான குடிமக்க ளின் மனுக்களுக்கு தேர்தல் ஆணையம் பதில ளிக்க மறுப்பது, வீடியோ பதிவுகளை வெளியிட மறுப்பது ஆகியவை இந்த சந்தேகங்களை பலப் படுத்துகின்றன. தேர்தல் ஆணையர்கள் ஆளும் மோடி அரசின் விசுவாசிகளாக செயல்படுவது தெளிவாகிறது. மின்னணு வாக்குப்பதிவு இருக்கும்போது இந்த தாமதம் ஏற்படுவது சாத்தியமில்லை.
மக்களாட்சியின் மீதான இந்த தாக்குதல் கவலைக்குரியது. வாக்குரிமையே கேள்விக்குறி யாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண ரப்பட வேண்டும். இல்லையேல் நம் ஜனநாய கத்தின் அடித்தளமே ஆட்டம் காணும்.
அரசியலமைப்பு நிறுவனங்களை சீரழிக்கும் மோடி அரசின் பாசிச போக்கிற்கு இது மேலும் ஒரு உதாரணமாகும். இதை மக்களிடையே அம்ப லப்படுத்துவது அவசியம்.