headlines

img

வெறுப்பின் உச்சம்

நாட்டில் முக்கியமான தொலைக்காட்சி நிலை யங்களில் ஒன்று சென்னை  தொலைக்காட்சி நிலையம். இந்த நிலையத்தில் தமிழ்ச் செய்திகள் ஒளிபரப்பப்படும் அலைவரிசைக்கு 1999 ஆம் ஆண்டு பொதிகை என்று அழகான தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது. அதுவும் ஒன்றிய அரசு வைத்த பெயர் அல்ல. மக்கள் வைத்த பெயர். என்ன பெயர் வைக்கலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கப் பட்டு, கடைசியில், பொதிகை மலையை நினைவு கூரும் பெயர் தேர்வு செய்யப்பட்டது. தமிழ் மொழி, தமிழர்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்று க்கு முக்கியத்துவம் அளித்து ஆரம்ப காலங்க ளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் படிப்படியாக இந்தி திணிக்கப்பட்டு உள்ளூர் நிகழ்ச்சிகள் குறைக்கப் ட்டபன. மேலும் தில்லியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு என்ற பெயரில் தமிழ் நிகழ்ச்சிக் கான நேரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இரண் டாவது முறையாக ஆட்சிக்கு வந்த மோடி அரசு  பொதிகை என்ற பெயரையும்   தூக்கி எறிந்து டிடி தமிழ் என்று மாற்றியது.  மேலும் நீல நிறத்தில் இருந்த இலச்சினையை காவிநிறத்திற்கு மாற்றியது. இப்படி தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் எதிரான அலை வரிசையாக மாற்றப்பட்டது டிடி தமிழ்.

இதன் தொடர்ச்சியாக முதல் முறையாக ‘இந்தி மாதம்’ என்ற பெயரில் ஆளுநரை தொலைக் காட்சி நிலையத்திற்கே அழைத்து விழா எடுத்துள்ளனர்.  இந்தியா போன்ற பல்வேறு மொழி கள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்ப தும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறு மைப்படுத்தும் முயற்சியே தவிர வேறு அல்ல.இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்த்திருக்க வேண்டும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மட்டுமே தேசிய மொழி என்று கூறவில்லை. ஒன்றிய அரசில் சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.  

இந்தியாவில் கணிசமான மக்களால் பேசப் படும் 122 மொழிகளும், 1599 பிற மொழிகளும் உள்ளன. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு எனும் போது ஒரு மொழியை மட்டும் தனித்து கொண்டாடுவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று முதல்வரும் அரசியல் கட்சித் தலைவர்க ளும் சுட்டிக் காட்டியுள்ளதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்தி  மாத விழாவை நடத்தியதோடு மட்டு மல்லாமல் நிகழ்ச்சியின் துவக்கத்தில் நாட்டுப் பண் பாடப்பட்ட பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற வாசகத்தை திட்ட மிட்டு தவிர்த்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தென்மாநில மக்கள் வாழும்பகுதி மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?