headlines

img

விழிப்புணர்வு அவசியம்

உலகளவில் இளம்வயது கருவுறுதல் குறைந்துள்ளது. ஆனால் இது நாடுகளுக்கு நாடு மாறுகிறது. கல்வியறிவு குறைந்த அல்லது குறைந்த பொருளாதார நிலையில் உள்ளவர்க ளிடையே இளம்வயது கருவுறுதல்  அதிகமாக உள்ளது. பெரும்பாலும் திட்டமிடாத கருத் தரித்தல்,  கருத்தடைகளைப் பெறுவதற்கும் பயன் படுத்துவதற்கும் உள்ள தடைகள் ஆகியவை இளம் பருவத்தினர் எதிர்பாராத கர்ப்பத்தைத் கரு வுறுதலை தடுக்கின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்தாண் டுகளில் இளவயது கருவுறுதல் 20 விழுக்காடு அதிகரித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.   கடந்த  ஐந்தாண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தாலும், இளவயது கருவுறுதல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறையின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.  2019-2020 ஆண்டில் 11,772 என்ற எண்ணிக்கையில் இருந்த இளவயது கருவுறுதல், 2023-2024 ஆம் ஆண்டில் 14,360 ஆக உயர்ந்துள் ளது. இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1.5 விழுக்காடு இளவயது கருவுறுதல் என்பது மிக அதிகம்.

இளம் வயது திருமணம், இளம் வயதில் திரு மணம் செய்துகொள்ள தரப்படும் சமுதாய மற்றும் சமூக அழுத்தம், பாலியல் வன்முறை, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த போதிய தகவலின்மை ஆகியவை இளவயது கரு வுறுதலுக்கு காரணங்களாக அமைந்துவிடுகிறது. இளவயது கருவுறுதல் என்பது உடல் ஆரோக்கி யத்தை கடுமையாக பாதிக்கும் என்பதோடு தாய்மார்கள் உயிரிழப்பையும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது மட்டுமின்றி, இருபது வயதிற்கு மேற்பட்ட தாய்மார் களுக்கு பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுகை யில், இளவயதினருக்கு பிறக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு 50 விழுக்காடு அதிகம் என்றும் கூறப் படுகிறது.

பெண்ணின் திருமண வயது குறைந்தபட்சம் 18 என்று இருக்கின்ற நிலையில், 2023-2024 ஆம் ஆண்டில் மட்டும் 13 முதல் 19 வயதிலான 14,360 பெண்கள் கருத்தரித்திருப்பதற்கு பாலியல் கல்வி  குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே கார ணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னி லையில் இருந்து வருகின்ற நிலையில், இள வயது கருவுறுதல் அதிகரித்துள்ளதானது ஆரோக்கியமான - தமிழ்நாடு என்ற நோக் கத்தை சிதைத்து விடும். ஆரோக்கியமான -அள வான குடும்பம் என்பது பாலின சமத்துவம், பிறப்பு களுக்கிடையே போதிய இடைவெளி விடுதல், திருமண வயதை உயர்த்துதல், இளம்வயது கரு வுறுதலை தவிர்த்தல் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு பாடத்திட்டங்களை சேர்க்கவேண்டும். ஆசிரி யர்களும் பெற்றோர்களும் இளம் வயது பெண்க ளிடம் வெளிப்படையாக இதுகுறித்து உரையாட வேண்டும், அப்போதுதான் ஆரோக்கியமான தாய்மார்களையும் குழந்தைகளையும் உருவாக்க முடியும்.