டெலாய்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள் அதிர்ச்சி தருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் உண்மை ஊதிய வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 2019ல் 5.2 சதவீதமாக இருந்த உண்மை ஊதிய வளர்ச்சி, 2020ல் -0.4 சதவீதமாக சரிந்தது. அதன் பிறகு மெதுவாக உயர்ந்து 2024ல் 3.6 சதவீத மாக உள்ளது. 2025ல் இது 4 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கூட கோவிட்டுக்கு முந்தைய காலத்தில் இருந்த வளர்ச்சி விகிதத்தை விட குறைவே.
நாட்டின் முக்கிய தொழில்துறைகளான ஐடி, உற்பத்தி, பொறியியல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளில் ஊதிய உயர்வு குறைக்க ப்பட்டுள்ளது. 2024ல் 9 சதவீதமாக இருந்த சராசரி ஊதிய உயர்வு 2025ல் 8.8 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த ஊதிய உயர்வு கூட பணவீக்கத்தால் விழுங்கப்பட்டு விடுகிறது. இதனால் மக்களின் உண்மையான வருமானம் குறைந்து, வாழ்க்கைத் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தி பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு பண வீக்கத்தை விட சற்றே அதிகமாக மட்டுமே இருந்துள்ளது என டெலாய்ட் இந்தியாவின் பங்காளர் ஆனந்தரூப் கோஷ் தெரிவிக்கிறார். இந்த இடைவெளி குறையும் போது, உண்மை வருமானமும், வாங்கும் சக்தியும் மேலும் குறைகிறது. குறிப்பாக குறைந்த ஊதிய பிரிவினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
டாடா குழுமத்தின் உயர் அதிகாரி பிரதீப் பக் ஷி கூறுவது போல, நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவிட்டுக்கு முன்பு இருந்த - விருப்ப பொருட்கள் வாங்கும் பழக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. வி-மார்ட் நிறு வனத்தின் நிர்வாக இயக்குனர் லலித் அகர்வால் கூறுவது போல, நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை குறைத்துக்கொண்டு, கடன்களை வாங்கி, போதுமான ஊதிய உயர்வோ பதவி உயர்வோ இல்லாமல் தவிக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினரின் நிலையே இத்தனை மோசம் என்றால், அன்றாடங்காய்ச்சிகளின் துயரம் எத்தனை கொடியது எனப் புரிந்து கொள்ளலாம்.
இந்த நிலைமைக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே முக்கிய காரணம். பெரு நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கை களை வகுத்து, சிறு மற்றும் குறு தொழில்களை புறக்கணித்து வருகிறது. இது வேலைவாய்ப்பு களை பெருமளவில் பாதித்துள்ளது. விலைவாசி கட்டுப்பாட்டில் அரசு படுதோல்வி அடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமெனில், அரசு தனது கொள்கைகளை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.