headlines

img

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமை கட்டடத்தில் இல்லை

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் துவங்கி யுள்ளது. பாரம்பரியமான பழைய கட்டடம் கைவிடப்பட்டு  செவ்வாய்க்கிழமையன்று முதல் புதிய கட்டடத்தில் நாடாளுமன்றம் செயல்படத் துவங்கும் என்றும் செப்.22ஆம் தேதி வரை சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் 75ஆண்டு கால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார். அப்போது எதிர்க் கட்சி உறுப்பினர்களின் மைக் அணைத்து வைக் கப்பட்டிருந்தது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். மோடி அரசு பின்பற்றும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுக்கு இது ஒரு உதாரணம்.

மேலும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறி வரும் அகண்ட பார தத்தை குறிக்கும் வரைபடம் இடம் பெற்றிருந்தது. நவீன ஜனநாயக சிற்பிகளை புறக்கணித்து மன்னர் கால கொடுங்கோல் ஆட்சிக்கு சட்டம் வகுத்த சாணக்கியரின் படம் இடம் பெற்றிருப் பது, மன்னர் கால செங்கோல் அவையில் நிறு வப்பட்டிருப்பது போன்றவை சர்ச்சைக்குள் ளான நிலையில், திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முற்றாக புறக் கணிக்கப்பட்டதையும், இந்த புதிய கட்டடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து ரயில் மேடை யில் வளர்ந்த நான், மக்களின் ஆதரவுடன் இந்த நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என மோடி “உருக்கமாக” குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட்டில் பிறந்த எந்தவொரு குடிமக்களும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்பது தான் மக்களாட்சி ஜனநாயகத்தின் உயரிய சிறப்பு ஆகும். ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மோடி ஆட்சி அளவுக்கு வேறு எந்த ஆட்சியும் இழிவுபடுத்தியது இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போதுகூட அதுகுறித்து விளக்கமளிக்க நாடாளு மன்றத்திற்கு வர மறுத்தவர் இவர். தனது ஆட்சி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது கூட அவையில் முழுமையாக அமர மறுத்தவர். இதுவெல்லாம் 75 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாகவே இடம் பெற்றுள்ளன. நாடா ளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் எதற்காக கூட்டப்படுகிறது என நாட்டு மக்களுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெரிவிக்க மறுத்தனர். இப்போது இந்தக் கூட்டத் தொடரில் சில கறுப்புச் சட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆட்சிக்கு  விடை தருவதே நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரே வழியாகும்.

;