headlines

img

தற்கொலைகளுக்குள் பொதிந்திருக்கும் குரூரம்

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் 2019 - 20 இல் 7.88 கோடிப் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். 2020 - 21 இல் - கோவிட் முதல் ஆண்டில் - இது 11.19 கோடிப் பேராக உயர்ந்தது. 2021 - 22 இல் 10.62 கோடிப் பேராக குறைந்தது. இந்த ஆண்டு இது வரையிலுமே 6.29 கோடிப் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஐந்து மாதங்களில் எட்டப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை 2014 -15 ஓராண்டு முழுவதும் இருந்த எண்ணிக்கையை விட அதிகம். இப்படி ஊரக வேலைத் திட்டத்தை சார்ந்து நிற்கிற எண்ணிக்கை அதிகரிப்பது நல்ல வருமானம் ஈட்டுகிற வேலை வாய்ப்புகள் அருகி போயிருப்பதன் வெளிப்பாடே. 

தேசியக் குற்றப் பதிவு ஆணைய அறிக்கை, 2021 ஆம் ஆண்டில் தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலைகள் அதிகரித்து இருப்பதை வெளிக் கொணர்ந்தது. மொத்த தற்கொலைகளில் (165033) 25 சதவீதம் தினக் கூலி தொழிலாளர் (42004) மத்தியிலேயே நிகழ்ந்துள்ளது. 

கிராமப் புற விவசாயத் தொழிலாளர், சிறு விவ சாயிகள் மத்தியிலும் 10881 தற்கொலைகள் (6.63 சதவீதம்) நடந்துள்ளன. இவர்களில் விவசாயத் தொழிலாளர்கள் 5563 பேர். 

இதன் இன்னொரு முகத்தைப் பார்ப்போம். 

எந்தவொரு பணிப் பாதுகாப்பும் சமூகப் பாது காப்பும் இல்லாத, விவசாயம் சாராத தினக் கூலி தொழிலாளர்கள் விகிதம் இது. 

மொத்த பட்டியல் சாதி தொழிலாளர்களில் 84சதவீதம்; மொத்த பழங்குடி தொழிலாளர்களில் 70சதவீதம்; பிற்படுத்தப்பட்ட சாதி தொழிலாளர்க ளில் 70 சதவீதம்; முற்பட்ட சாதிகளில் 54 சதவீதம் பேர் எந்தப் பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ளனர்.

நிதி ஆயோக் இணைய தளத்தில் 2012 ஆவ ணம் ஒன்று கிடைக்கிறது. அதில் அன்றைய கிரா மப்புற மேம்பாட்டு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள முன்னுரையில் அந்த திட்டம் அம லான முதல் ஆறு ஆண்டுகளில் (2006 - 2011) உரு வாக்கப்பட்ட 1100 கோடி வேலை நாட்களில் 55 சத வீதம் எஸ்.சி, எஸ்.டி. குடும்பங்களுக்கே சென்றுள் ளது என்கிறார். இது நிவாரணம் என்றாலும் இதை தேடுகிற நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களே  வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் வெளிச்சம். 

வேலையின்மையின் தீவிரங்கள், மரணங்க ளை உந்தித் தள்ளுகின்றன.

மரணத்திற்குள் சாதி தேடுவது மனிதாபி மானம் அல்ல என்று சிலர் கருதலாம். எல்லா  அத்துக்கூலி தொழிலாளர்களும், கிராமப்புற உழைப்பாளி மக்களும் கைகோர்க்க வேண்டிய வர்கள். ஆனால் இந்தியச் சமூகத்தில் மரணங்க ளுக்குள்ளும் சாதி இருக்கிறது என்பது குரூர மான யதார்த்தம். 

தினக் கூலி தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் தற்கொலைகள் அதிக ரித்துள்ளது; அதுவே மொத்த தற்கொலைகளில் 32 சதவீதம் எனும் போது இவ்விவரங்கள் இந்தியச் சமூகத்தின் வர்க்க பேதம், சாதி பேதம் இரண்டை யும் ஒரு சேர உணர்த்துகின்றன.

;