headlines

img

ஆள்வோர் - அதானி கள்ளக்கூட்டின் பின்னணி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்களன்று துவங்கி யுள்ளது. அதானி-மோடி அரசின் கூட்டு மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்பும் என்பதை முன்னுணர்ந்த ஆளுங்கட்சியினர், இதை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெளி நாட்டிற்கு சென்று பேசும்போது, இந்தியாவை இழிவுபடுத்திவிட்டதாக கூறி அமைச்சர்கள், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தூண்டி விட்டனர். இதைத் தொடர்ந்து ஆளுங்கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சி யினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

எனினும், எதிர்க்கட்சியினர் அதானி பிரச்ச னையை எழுப்பினர். ஹிண்டன்பர்க் ஆய்வு நிறு வனம் வெளியிட்டுள்ள அதானி மோசடி குறித்து  நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க  வேண்டுமென கோரி முழக்கங்களை எழுப்பினர். இதற்கு ஆளுங்கட்சி ஒப்புக்கொள்ள மறுத்த  நிலையில் அவையில் கொந்தளிப்பு ஏற்பட்டதால்,  அவை ஒத்திவைக்கப்பட்டது.

மடியில் கனம் இல்லையென்றால், வழியில்  பயம் எதற்கு? உச்ச நீதிமன்றத்திலும் விசார ணைக்கு மோடி அரசு மறுத்த நிலையில், உச்ச நீதி மன்றமே ஒரு விசாரணைக்குழுவை அமைக்கும் நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்தால், உண்மை வெளியாகிவிடும் என்ற  அச்சத்தின் காரணமாகவே, ஒன்றிய அரசு மறுக்கிறது. 

அதானிக்கு எந்தளவு மோடி அரசு முட்டு கொடுக்கிறது என்பதற்கு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் சாட்சி யமாக உள்ளது. அதானி குழுமத்துக்கு பொதுத் துறை வங்கிகள் அளித்துள்ள கடன் தொகை எவ்வளவு என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி விதிகளின் படி, அந்த கடன் விவரத்தை வெளியே தெரிவிக்க  முடியாது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  ஏழை-எளிய மாணவர்களின் கல்விக்கடன், விவ சாயிகளின் பயிர்க்கடன், நெசவாளர்கள் மற்றும் சிறு-குறு- நடுத்தர தொழில்முனைவோர்களின் தொழில் கடன், நடுத்தர மக்களின் வீட்டுக் கடன் போன்றவற்றிற்கு புகைப்படத்துடன் நோட் டீஸ் வெளியிட்டு கந்து வட்டிக்காரர்கள் போல் வசூ லிக்கும் வங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாயை  வெளியே தெரிவிக்கக் கூட சட்டம் குறுக்கே நிற்கு மானால், அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும்.

எல்ஐசி-யில் மக்களின் முதலீடான பணத்தை 2022 டிசம்பர் 31 கணக்குப்படி ரூ.6,347 கோடியும், 2023  மார்ச் 5 கணக்குப்படி ரூ.6,182 கோடியும் அதானி நிறு வனத்திற்கு தரப்பட்டுள்ளது. அப்படியென்றால், பொதுத்துறை வங்கிகளின் கடன் இதைவிட பல  மடங்கு அதிகமாகவே இருக்கும். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உடன்படாமல், பொதுத்துறை வங்கிகள் கொடுத்த  கடன் விவரத் தையும் வெளியே சொல்ல மறுக்கிறார்கள் என்றால்,  அதானி அடித்த கொள்ளை எவ்வளவு என்று  தெளிவாகத் தெரிகிறது. 

இது அன்றாடம் காய்ச்சிகளுக்கான  அரசு அல்ல; அம்பானி-அதானிகளின் அரசு.