headlines

img

எதற்கு அரசாங்கம்?

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்க ளில் முக்கியமில்லாத பணிகளில் ஈடுபட்டு வந்த சி.ஐ.எஸ்.எப்.வீரர்கள் 3049 பேர் விடுவிக்கப்படு கின்றனர் என்று ஒன்றிய பாஜக அரசு தெரி வித்திருக்கிறது. மேலும் அந்த இடங்களில்  தனி யார் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருக்கிறது. முக்கியமில்லாத பணியிடம் என்றால் எதற்காகத் தனியார் பாது காவலர்களை நியமிக்க வேண்டும்? இங்கு ‘பணி’ முக்கியமில்லாததாக இருக்கிறதா அல்லது ‘தனி யார்‘ பாதுகாப்பு நிறுவனம் முக்கியமானதாக மாறு கிறதா என்ற கேள்வி எழுகிறது.  

1999 ல்  வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதி களால் காந்தகாருக்கு கடத்தப்பட்டது. அதன்  பின்பு தான்  பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற் காக  விமான நிலைய பாதுகாப்பு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்) யிடம் ஒப்படைக் கப்பட்டது. ஆனால் அதே பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுதான் இன்று அதனை முக்கியத்துவ மில்லாத பணி என்று வரையறுக்கிறது. 

பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் போதுதான் அந்த பணியின் முக்கியத்துவம் வெளிப்படும். ஊர் முழுக்க தீயணைப்பு நிலையங்கள் இருக் கின்றன. அதில் ஊழியர்கள் இருக்கின்றனர். தினமும் தீப் பிடித்து எரிவதாலா இந்த நிலை யங்கள் இயங்குகின்றன? எதிர்பாராத விதமாக எப்போது தீப் பிடித்தாலும் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதே அதன் நோக்கம். அதே போன்றது தான் விமானப் பயணிகளின் பாதுகாப்பும். ஆனால் ஒன்றிய அரசின் நோக்கம் பயணிக ளைப் பாதுகாப்பது அல்ல. மாறாக விமான நிலை யங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் அதானி க்கு கொள்ளை லாபம் ஈட்டிக் கொடுப்பதே ஆகும். இது ஆர்எஸ்எஸ் சார்பு அதானியை பாதுகாப்ப தற்காக,  தேசப் பாதுகாப்பைக் காவு கொடுக்கும் தேசவிரோதச் செயல் ஆகும்.

தற்போது முக்கியமில்லாத பணிகள் எனத் துவங்கியிருக்கும்  சிஐஎஸ்எப் ஆட்குறைப்பை, படிப்படியாக அதிகரித்து ஒட்டு மொத்தமாகப் பாது காப்பு பொறுப்பை  தனியாரிடம் ஒப்படைப்பதே நோக்கமாகும். 

மேலும், இதுவரை நாக்பூர் ஆர்எஸ்எஸ்  தலை மையகத்திற்கு மாநில அரசுதான் பாதுகாப்பு அளித்து வந்தது; தற்போது மத்திய சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஏன் தனியார் பாதுகாவலர்களையே நியமித்தி ருக்கலாமே? அது மட்டும் எந்த வகையில் முக்கிய மான பணியாக மாறுகிறது?

ஏற்கனவே திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை மோடி அரசு அதானி குழு மத்திடம் கொடுத்து விட்டது. அடுத்து இருக்கும் சென்னை, திருச்சி உள்ளிட்ட 25 விமான நிலையங்களையும் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இராணுவம், துறைமுகம், விமானநிலையம், தொலைத் தொடர்பு, கல்வி, சுகாதாரம், சாலை, ரயில்  எல்லாம் தனியார் என்றால் எதற்காக அரசாங்கம்? 

மோடி அரசின் இந்த கொள்கை  தேசத்தையே நாசமாக்கி விடும். அதற்கெதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்.

;