headlines

img

நெட்தேர்வு முறைகேடு: ஒன்றிய அரசின் தோல்வியே!

நெட் - தேசியத் தகுதித் தேர்வு, நாடு முழு வதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூ ரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்கான தேர்வாகும். தேசிய தேர்வு முகமை கடந்த செவ்வாயன்று  (ஜூன் 18)  நடத்திய இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததையடுத்து  ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நெட் தேர்வு எழுதிய மாணவர்கள்  பெரும் கவலையில் மூழ்கி யுள்ளனர். நேர்மையான முறையில் தேர்வை எழுதியவர்களுக்கு முனைவர் பட்டப்படிப்புக் கான தயாரிப்புகளும், மேற்படிப்புக்கான எதிர் காலத் திட்டமும் பாழாகிவிட்டது. 

தேர்வு முறைகேடு தொடர்பாக  இந்திய தண்ட னைச் சட்டத்தின் பிரிவுகள் 420 மற்றும் 120 பி, (ஏமாற்றுதல் மற்றும் குற்றச்சதி) ஆகியவற்றின் கீழ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.  தேர்வுக்கான வினாத்தாள் டார்க் நெட் எனப்படும் சிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய  தொழில்நுட்பம் வாயிலாக  கசிந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. திட்டமிட்டு மோசடி செய்ய வினாத்தாளை கசிய விட்டுள்ளனர். 

நீட் தேர்வு முறைகேடு குறித்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள் நெட் தேர்விலும் முறைகேடு  என்பது  ஒன்றிய பாஜக அரசின் தோல் வியையே எடுத்துக்காட்டுகிறது.  இதற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்கவேண்டும். வடஇந்தியாவில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாட்டும் கடும் வெயிலுக்கு இடையே மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதற்காக பலர் 300 கிலோமீட்டர் வரை பயணம் செய்துள்ளனர். 

கடந்த காலங்களில் முறைகேடுகளை ஒப்புக் கொள்ளாத ஒன்றிய அரசு நெட் தேர்வு முறை கேட்டிற்கு பின்னர், முதல்முறையாக தார்மீக ரீதி யாக பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.  ஆயினும் அரசு அதன் பொறுப்பில் இருந்து நழுவ முடியாது.  ஏனெனில் 9 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றால் பல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்திருக்கும். இந்தத்  தேர்வை முடித்திருந்தால் பிஎச்.டி படிப்புக்கான வழிகாட்டும் பேராசிரியரை அவர்கள் அடையா ளம் காண்பது எளிதாக இருந்திருக்கும்.  தற்போது தேர்வு  ரத்து செய்யப்பட்டதால் இவை தடை பட்டுள்ளன. இதனால்  மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  பீகார் மாநி லத்தில் இந்த முறைகேடு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னணி குறித்து சிபிஐ நேர்மையாக விசாரித்து முறை கேட்டில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருப்ப தற்கு தொழில்நுட்ப ரீதியிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.