headlines

img

காவு கொடுப்பதா ?

இந்தியாவின் பாதுகாப்பைக் காவு  கொடுக்கும் வகையில் மோடி அரசு அமெரிக்கா வுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கி றது. அதில் ஒன்று  சென்னையை அமெரிக்கா வின் ராணுவ தளமாகப் பயன்படுத்தும் ஆபத்தை உள்ளடக்கியிருக்கிறது. இதனை அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இணைந்து எதிர்த்திட வேண்டும்.

அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அமெரிக்க அரசுடன் பல்வேறு ஒப்பந்  தங்களில் கையெழுத்திட்டார். அதில் பாது காப்பு தொடர்புடைய ஓர் ஒப்பந்தமும் போடப் பட்டிருக்கிறது. அதில் அமெரிக்கக் கடற்படை சென்னை காட்டுப்பள்ளியில்  உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ ( எல் & டி) கப்பல் கட்டும் தளத்து டன் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தம் போட்டி ருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெ ரிக்கக் கடற்படை கப்பல்களை இந்தியா விற்குள் அனுமதிப்பதுடன், நிலையான செயல்  பாடுகளை உருவாக்கும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

சென்னை மட்டுமின்றி மும்பையில் மசா கான் டாக் லிமிடெட், கோவாவில் கோவா  கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றுடன் ஒப்பந்தங்  களை இறுதி செய்யும் நிலையில் இருக்கிறது. இது  இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கான ஒப் பந்தம் மட்டுமல்ல; அமெரிக்கா, இந்தியா,  ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளிடை யேயான குவாட் ராணுவ கூட்டமைப்பு  செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு சீனா வைக் குறிவைத்து சென்னையில் அமெரிக்க கப்பல்தளம் என்பது மாறிவரும் சூழலில் புவி சார் அரசியலில் தமிழ்நாடு ஒரு மையப்புள்ளி யாக மாறுவதற்கான ஆபத்தை உருவாக்கும். அது தமிழகத்தின் அமைதியான வளர்ச்சிக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். மேலும் இந்த  ஒப்பந்தம் வங்கக் கடலை அமெரிக்கா வின் கட்டுக்குள் கெண்டு வரும் வாய்ப்பையும்  வழங்க வழிவகுக்கும். இது அண்டை நாடுகளுட னான நட்புறவிற்குப் பதிலாகப் பகை உணர்வை யே அதிகரிக்கும். அமெரிக்காவின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா இரையாகக் கூடாது. 

இந்தியாவின் அயல் துறை கொள்கையை மோடி அரசு தலைகீழாக மாற்றி வருகிறது. நம்  நாட்டின் அயல் துறை கொள்கையை, ஆசிய-  பசிபிக் பிராந்தியத்தில் முற்றிலுமாக அமெரிக்கா வின் பூகோள அரசியல்  நலன்களுடன் ஒத்துப்  போகக் கூடிய விதத்தில் மாற்றி அமைத்தி ருக்கிறது. இந்திய அரசு இதுவரை கடைப் பிடித்து வந்த அணிசேராக் கொள்கையைச் சிதைத்திருக்கிறது மோடி அரசு. அமைதிக்கான கொள்கையைப் புறந்தள்ளிவிட்டு முரண்களை அதிகரித்து, அண்டை நாடுகளுடன் பகை மையை வளர்த்து வருகிறது. இது தேசத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் குந்தகத்தையே ஏற்படுத்தும்.

;