மணிப்பூரில் மே 3 அன்று துவங்கிய கலவரம் வன்முறை - வெறியாட்டம் பாஜகவின் மோச மான ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சியால் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த கலவரத்தால் கோவிட் காலத்தை விட மிக மோசமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது; தற்போது முழு இணைய முடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ளதால் மணிப்பூர் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற தீவைப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களால் பல்லா யிரக்கணக்கான மாணவர்களின் கல்வி சான்றி தழ் உட்பட ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.கோடை விடுமுறை முடித்து மீண்டும் கல்வி நிலையங்களை திறந்தாலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து இல்லை.
ஏறக்குறைய அனைத்து முக்கியமான கல்வி நிறுவனங்களும் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்துள்ளன. இதன் காரணமாக மலைப்பகுதி களைச் சேர்ந்த பழங்குடி மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர பயப்படுகிறார்கள் மற்றும் பல பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டும் திறக்க முடியாத நிலையில் உள்ளன.
சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் மாணவர்களால் வர முடியவில்லை. எந்த நேரம் எந்த இடத்தில் வன்முறையும் மோதலும் வெடிக்குமோ என்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் நிவாரண முகாம்களில் உள்ளனர். இயல்பான வாழ்க்கைச் சூழலை இழந்து அசாதா ரண சூழ்நிலையை எதிர் கொண்டுள்ள அவர் களின் கல்வியும் எதிர்காலமும் சிதைந்து கொண்டு உள்ளது. அரசு முன்கூட்டியே தொலை நோக்குப் பார்வையுடனும், சாதுர்யத்துடனும் நடவடிக்கை எடுத்து இருந்தால் மாநிலத்தின் நிலைமை இவ்வளவு மோசமாக சென்றிருக்காது.
இந்த சூழலை கருத்தில் கொண்டு மணிப்பூர் பல்கலைக்கழகம் மற்றும் தனமஞ்சூரி பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் களை வேறு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இட மாற்றம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து, கல்வி இடைநிற்றல் இன்றி தொடர வழி செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமாருக்கு குக்கி மாணவர் அமைப்பு ஜூலை 19 அன்று கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது.மேலும் தீவைப்பு உள்ளிட்ட அழிப்பு சம்பவங்களால் சான்றிதழ் களை இழந்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் அசல் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல, குழந்தை களுக்கான ஊட்டச்சத்து மையங்கள், அங்கன் வாடி மையங்கள் உள்பட எதையும் திறக்கமுடியவில்லை. மணிப்பூர் குழந்தைகள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மோடி அரசிடம் என்ன பதில் உள்ளது?