headlines

img

நெருப்பாற்றில் வீசாதீர்!

பாதுகாப்புப் படைகள் முழுவதும் துடிப்பான இளைஞர்களால் நிறைந்திருக்கும் என்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் ராணுவம் எந்த அளவுக்கு துடிப் பான இளமையோடு இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு அனுபவச் செறிவோடும் இருக்க வேண் டும். சராசரி வயதைக் குறைக்க வேண்டிய அவசி யம் பற்றிய விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எப்படிப்பட்ட கலவை என்ற விகிதாச்சாரமும் நிர்ண யமாகவில்லை. கொள்கை மாற்றத்திற்கு சாதக மாகச் சொல்லும் இந்த ஒரேயொரு அம்சத்திலும் சாரமில்லை. அறிவியல்பூர்வமான ஆய்வுகள் அடிப்படை யில் தான் தரைப்படையில் 17 ஆண்டுகள், கப்பற் படையில் 15 ஆண்டுகள், விமானப்படையில் 20 ஆண்டுகள் என்று குறைந்தபட்ச பணிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டது.  இவர்கள் சொல்லியிருக்கும் 17.5 முதல் 21 வயது என்ற அடிப்படையில்தான் தற்போதும் ஆட்களைச் சேர்க்கிறார்கள். குறைந்த பட்ச பணிக்காலம் என்பது 32 முதல் 40 வயது வரைதான் உள்ளது. இந்த வயதுக்காரர்களின் செயல்பாடுகள் மந்தமாக இருந்தன என்று யாரும் சொல்லவில்லை. அப்படி எதுவும் ஆய்வு நடந்த தாகவும் தெரியவில்லை. கவுரவமான முறையில் முப்படைகளில் வீரர்களாக இணைக்கப்பட்டு வந்தவர்கள் இப் போது ஒப்பந்தப் பணியாளர்களாக சேர்க்கப்பட விருக்கிறார்கள்.

நிரந்தரப் படைவீரர்களுக்கு இது நமது படை, நமது கடமை என்ற உணர்வுகள் மேலோங்கி நிற்கும். ஆனால் இந்த நான்காண்டு பணிக்காலத்தில் ஆறு மாத காலம் பயிற்சிக்குப் போய்விடுகிறது. பின் இரண்டு இடங்களில் இவர் களை நிறுத்தினால், அந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குள் மொத்தப் பணிக்காலமே நிறைவு பெற்றுவிடும்.  இந்த அறிவிப்பில் பொருளாதார ரீதியான பலன்கள்தான் அதிகமாக இடத்தைப் பிடித்துள் ளன. அதில் ஊதியத்தைப் பற்றிச் சொல்லி விட்டு, 30 விழுக்காடு பிடித்தம் செய்து, நான் காண்டுகளுக்குப் பிறகு வெளியேறும்போது தங்கள் பங்களிப்போடு பணப்பலன் கிடைக்கும் என்கிறார்கள். அதாவது 5 லட்சம் ரூபாயைத் தந்துவிட்டு, ஓய்வூதியம் கிடையாது என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள். இது வரையில், அரசு வேலைவாய்ப்பில் பழைய ஓய்வூதியத்திட்டம், அதாவது உண்மையிலேயே ஓய்வூதியம் கிடைக்கும் திட்டம், ராணுவத்தின ருக்குதான் இருந்தது. இப்போது அதுவும் பலிபீடத்தில் வைக்கப்பட்டு விட்டது. இவர்களின் அறிவிப்புகள் என்ற திரையை விலக்கி விட்டுப் பார்த்தால், செலவுக்குறைப்புதான் இவர்களுடைய திட்டம் என்பது பளீரென்று தெரி கிறது. அந்த செலவுக்குறைப்பில், சாதாரண வீரர்க ளை “நெருப்பிற்குள்” இறக்கி விடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்படு கிறது. மிகவும் இளமையான பருவத்தை ராணு வத்திற்காக செலவிட்டு விட்டு,  வெளியில் வரும் போது உத்தரவாதமான வேலைவாய்ப்பு இருக்கப் போகிறதா என்பது கேள்விக்குறிதான்.  எனவே இவர்களின் புதிய திட்டப்படி முப்படை வீரர்கள் நடக்கப்போவது அக்கினிப் பாதை மட்டு மல்ல. அது நெருப்பாறு. அவர்களை அதில் ஆகுதி போல் வீசுவது எந்த விதத்திலும் நியாயமல்ல.

;