headlines

img

அதே பழைய பாஜக, மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு நகர்வும் கூட ‘பில்டப்’ செய்யப்படுகிறது. தனிப்  பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சி களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தாலும் கூட  அதுவும் சாதனை என்று பேசப்படுகிறது. 303  இடங்களில் கடந்த முறை வென்ற பாஜக தற்  போது 240 இடங்களுடன் சுருண்டதை- 400 இடங்க ளில் வெல்வோம் என்று அலப்பறை செய்ததை -  மறைத்துவிட்டு, மறந்து விட்டு மூன்றாவது முறை யாக ஆட்சியமைக்கிறது பாஜக என்றும், நேரு வுக்குப் பின் மூன்றாவது முறையாகப் பிரதமரா னார் மோடி என்றும் புகழ் பாடப்படுகிறது.

பி.எம். கிசான் திட்டத்தின்படி விவசாயி களுக்கு உதவித் தொகை வழங்கும் கோப்பில்  முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி என்று  ஊடகங்கள் ஊதுகின்றன. இதுபற்றி அவரே, தனது எக்ஸ் தளத்தில், “புதிய அரசின் முதல்  முடிவு விவசாயிகளுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் விவசாயிகளுக்காகவே தங்க ளது அரசு செயல்படுவதாகவும்” கூறியுள்ளார்.

இது ஒன்றும் புதிய முடிவுமல்ல, இவரும் விவ சாயிகளுக்காகச் செயல்படுபவருமல்ல என்பதால் தான் மக்கள் இவரது கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறார்கள். இது அவரது அரசின் விவசாய விரோத நட வடிக்கைகளுக்கு மக்கள் கொடுத்த பதிலடிதான்.  அதை மறைக்கவே, ஏதோ புதிதாகச் செய்வது போல பேசுகிறார்.

பி.எம். கிசான் திட்டத்தின் இந்த உதவித் தொகை விடுவிப்பு நடவடிக்கை ஏற்கனவே 16 முறை நடந்துவிட்டது. இது 17 ஆவது தவணை  விடுவிப்புக்கான கையெழுத்து தான். விவசாயி களின் முக்கியக் கோரிக்கைகள் எதையுமே ஏற்  காத பாஜக அரசு, அவர்களை தாஜா செய்வதற்  கான முயற்சியாகவே இதை செய்து வருகிறது.

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படி யான விலைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் மின்சார திருத்தச் சட்டத்தை கைவிட  வேண்டும் என்றும் விவசாயிகளின் கடன்களை  ஒருமுறை தள்ளுபடி செய்திட வேண்டும் என்றும்  போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்றும் போராட் டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்  பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற எந்த கோரிக்கையையும் மோடி அரசு ஏற்கவில்லை. அதே பழைய கொள்கையையே இப்போதும் கடைப்பிடித்துக் கொண்டு, புதியதாக - பெரிதாக ஏதோ செய்து விட்டதுபோல் பேசி ஏமாற்ற முயற்சிக்கிறார் மோடி. இந்திய மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.

கடந்த காலத்திலாவது கையெழுத்துப் போட்ட தும் நிதி விடுவிக்கப்பட்டு உடனே விவசாயி களுக்கு சென்று சேரும். ஆனால் இந்த முறையோ  இம்மாத இறுதிக்குள் விவசாயிகள் கணக்கில்  வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் இதுவும் ஒரு படம் காட்டுதல் தானா? அதே பழைய பாஜக, அதே பழைய மோடி. மாறாதய்யா மாறாது. மணமும் குணமும் மாறாது.

;