headlines

img

பாஜகவின் குறுக்கு புத்தி

ஜம்மு - காஷ்மீரை சிதைத்து யூனியன் பிரதேசங்களாக குறுக்கிய  மத்திய அரசு அங்கு பாரம்பரியமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒடுக்கி வருகிறது.அரசியல் சாசனப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டதை  எதிர்த்து காஷ்மீரிகள் ஒட்டு மொத்தமாக இப்போது கேள்வி கேட்கும்  நிலையில் அவர்கள் வீட்டிற்குள் பூட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். எத்தனை தேர்தலில் போட்டியிட்டாலும் காஷ்மீரில் வெற்றிபெறமுடியாது என்று பாஜகவுக்கு நன்கு தெரியும். 

ஜம்மு -  காஷ்மீர் என்ற ஒருங்கிணைந்த மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களின் செல்வாக்கைக் குறைப்பதும் அவையூனியன்பிரதேசங்களாக மாற்றப்பட்டதற்கான நோக்கங்களும் ஒன்று.  அதன் தொடர்ச்சியாகஅம்மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் - இந்த முயற்சிகளுக்கு எதிராக அம்மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் ‘குப்கார் கூட்டணி’ என்ற பெயரில்  ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. இக்கட்சிகள் விரைவில் நடைபெறவுள்ள காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்தேர்தலை ஒரே அணியாக சந்திக்கத் திட்டமிட்டுள்ளன. இது பாஜகவிற்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

திர்க்கட்சிகளின் வெற்றி உறுதி என்பதால் அந்த வெற்றியை தடுக்க சீர்குலைவு வேலைகளில் மத்திய பாஜக அரசும் அம்மாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள துணை நிலை ஆளுநரும் ஈடுபட்டுள்ளனர்.சிபிஐ,மத்திய அமலாக்க இயக்குநரகம், தேசிய புலனாய்வு முகமை ஆகிய மத்திய ஏஜென்சிகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும்கீழ்த்தரமான வேலைகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் பாராட்டு பெற்ற  மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி)  இளைஞர் அணித் தலைவர் வாகீத் உர் ரஹ்மான் பர்ரா,  தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில், மாவட்ட மேம்பாட்டுகவுன்சில்  (டிடிசி)  தேர்தலுக்காக வேட்பு மனுவைத்தாக்கல் செய்த மூன்றே நாட்களில் அவரைதேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.இது  ஜனநாயக இயக்கங்களை நசுக்கும்நடவடிக்கையாகும். தேர்தல் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பர்ரா மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றுஅவரது கட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர்.அதேபோல் தேசிய மாநாட்டு கட்சித்தலைவர்கள் பரூக் அப்துல்லா. உமர் அப்துல்லா ஆகியோர் மீது ஆக்கிரமிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் எதிர்க்கட்சிகளின்  வெற்றியைத் தடுக்கவேண்டும் என்பதற்காக  மத்திய பாஜக அரசு மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கேரளா. அங்குள்ள இடது ஜனநாயகமுன்னணி அரசைக் களங்கப்படுத்த மத்திய அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரும் அதிலிருந்து விலக்கு அல்ல. பொய் வழக்குகளைப் போட்டு எதிர்க்கட்சிகளை ஒடுக்கமுயற்சிக்கும் மத்திய  அரசுக்குக் காஷ்மீர் மக்கள்வரும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில்படுதோல்வியை அளிப்பது  உறுதி.
 

;