headlines

img

நெல்லை கண்ணன் கைது- எழுப்பும் கேள்விகள்

பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் கார ணமாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் உட னடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். சட்டம் தன் கடமையைச் செய் துள்ளது என்று இந்த நடவடிக்கையை நியாயப் படுத்தியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. பாஜக மற்றும் இந்துத்துவா பிரமுகர்கள் அத்துமீறியும், அநாகரிகமாகவும், இரு பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலும், பேசி வருவது குறித்து புகார் அளிக்கப்பட்டால் பதுங்கிக் கொள்ளும் சட்டம், பாஜகவை எதிர்த்து பேசுப வர்களை மட்டும் பாய்ந்து பிடுங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

உயர்நீதிமன்றத்தையே இழிவாகப் பேசிய பாஜக பிரமுகர் எச்.ராஜா கடைசி வரை கைது செய்யப்படவே இல்லை. கவிஞர் வைரமுத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசும் போதும், சட்டம் அமைதியாகவே இருந்தது. பெட்ரோல் குண்டு வீசுவேன் என திருவில்லிப் புத்தூர் ஜீயர் பேசியது குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை. 

மாணவர்கள் போராடினால் கல்லூரி வளாகத் திற்குள் வெடிகுண்டு வீசுவேன் என எச்.ராஜா பேசும்போதும், மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வாசலில் பெண்கள் கோலம் போட்டால் குடும்பமே குளோசாகி விடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி யுள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் அனை வரையும் இழிவுப்படுத்தி பேசிய எஸ்.வி.சேகர் ஒரு நிமிடம் கூட காவல் நிலையத்தில் இருத்தி வைக்கப்படவில்லையே ஏன்? 

பாஜக பிரமுகர் கல்யாணராமன் குறிப்பிட்ட மத நம்பிக்கைகளுக்கெதிராக தொடர்ந்து விஷம் கக்கி வருவது காவல்துறைக்கு தெரியாதா? பாஜக வினரிடம் மட்டும் காவல்துறை பணிவு காட்டுவது  ஏன்? அவர்கள் சட்டம் ஒழுங்குக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்று தமிழகத்தில் ஏதே னும் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? 

சென்னை மெரினா கடற்கரையில் யாரும் கூடுவதற்கு அனுமதியில்லை என்று கூறும் சென்னை மாநகர காவல்துறை, எச்.ராஜா வகை யறா அங்கு கூடிநின்று கூச்சல் போடுவதற்கு அனுமதி கொடுத்தது ஏன்? 

நெல்லை கண்ணன் வீட்டின் முன்பு பாஜக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும், அவர் கொண்டு செல்லப்படும் மருத்துவமனைகளை எல்லாம் முற்றுகையிட்டபோதும், பெரம்பலூரில் அவர் கைது செய்யப்பட்டபோது அவரை உருட்டுக் கட்டையால் தாக்க முயன்றபோதும், காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? 

தமிழக காவல்துறை தற்போது யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகின்றன பல்வேறு சம்பவங்கள். பாஜகவினரின் இத்தகைய அத்துமீறல்களுக்கு அதிமுக அரசு துணை நிற்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைக்க துணை போவதற்குச் சமம்.